அழிவை யாராலும் தடுக்க முடியாது – மீண்டும் வெடிக்கும் சர்ச்சை

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க விலகாவிட்டால் கட்சி அழிவடைவதை யாராலும் தடுக்க முடியாது என அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

(ஞாயிற்றுக்கிழமை) மல்வத்து மஹா தேரர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் மாற்றப்படவேண்டியது மிக முக்கியமானதாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், கட்சியின் முன்னேற்றத்திற்காக இந்த விடயத்தை செய்தே ஆகவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தற்போதைய தலைமைப் பொறுப்பு மாற்றப்பட்டால் அது கட்சியின் ஒரு தரப்பினருக்கு பாரிய நட்டத்தினை ஏற்படுத்தும் விடயமாக அமையும் என்ற காரணமும் இந்த தலைமை மாற்றத்தில் தாக்கம் செலுத்தும் விடயமாகவே காணப்படுகின்றது எனவும் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

எது எப்படியாயினும் அடுத்த ஜனாதிபதி தேர்தலின் போது ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக களமிறங்கினால் பாரியதோர் தோல்வியினை அவர் சந்திப்பார் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும், ரணிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, தலைமைப்பொறுப்பு மாற்றப்படவேண்டும்  எனவும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ரணிலின் தலைமை பதவி குறித்து சர்ச்சைகள் வெடித்து வந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீறுமைப்பிற்கு பின்னர் ரணில் குறித்த விமர்சனங்கள் அக்கட்சிக்குள் அடங்கியிருந்தன.

எனினும் மீண்டும் கட்சிக்குள் உட்பூசல்கள் வெடித்துவருகின்றன. மேலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் யார் என்ற விடத்திலும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

Ninaivil

திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018