பரபரப்பான ஆட்டத்தில் வலுவான இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஸ்காட்லாந்து

ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி கடைக்கோடியில் இருக்கும் ஸ்காட்லாந்துக்கு எதிராக ஒரேயொரு போட்டியில் இன்று விளையாடியது. இந்த ஆட்டம் எடின்பர்க்கில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணியின் கிராஸ், கோயெட்சர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கிராஸ் 39 பந்தில் 48 ரன்களும், கோயெட்சர் 49 பந்தில் 58 ரன்களும் சேர்த்தனர்.

அதன்பின் வந்த மெக்லியோட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 94 பந்தில் 16 பவுண்டரி, 3 சிக்சருடன் 140 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்கவும், அவருக்கு துணையாக முன்சே 51 பந்தில் 55 ரன்கள் சேர்க்கவும் ஸ்காட்லாந்து 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், பிளங்கெட் ஆகியோர் 2 விக்கெட்டும், மார்க் வுட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.அதன்பின், 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 129 ரன்களை எடுத்தது. ஜேசன் ராய் 34 ரன்னில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய அலெக்ஸ் ஹேல்ஸ் பேர்ஸ்டோவுக்கு ஒத்துழைப்பு அளித்தார். 

பேர்ஸ்டோவ் தனது அதிரடியை காட்டினார். அவர் 59 பந்துகளில் 6 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து இறங்கிய ஜோ ரூட் 29 ரன்னில் வெளியேறினார். அலெக்ஸ் ஹேல்சும் அரை சதமடித்தார். அவர் 52 ரன்களில் அவுட்டானார். மொயின் அலி 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், லியாம் பிளங்கெட் தனியாக நின்று போராடினார். கடைசி 2 ஒவர்களில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரின் முதல் பந்தில் அதில் ரஷித் ரன் அவுட்டானார். அடுத்த  3 பந்துகளில் தலா ஒரு ரன் பெறப்பட்டது. ஐந்தாவது பந்தில் மார்க் வுட் அவுட்டானார். இறுதியில், இங்கிலாந்து அணி 48.5 ஓவரில் 365 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிளங்கெட் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஸ்காட்லாந்து சார்பில் மார்க் வாட் 3 விக்கெட்டும், அலாஸ்டெய்ர் எவன்ஸ், ரிச்சி பெரிங்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

வலுவான இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்காட்லாந்து வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆட்ட நாயகன் விருதுக்கு மெக்லியோட் தேர்வு செய்யப்பட்டார்.

Ninaivil

திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திருகோணமலை
கனடா
22 யூன் 2018
Pub.Date: June 23, 2018
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018