கர்நாடகா : ஜெயநகர் தொகுதிக்கு இன்று இடை தேர்தல்

கர்நாடக மாநிலத்தில் வேட்பாளர் மரணம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெயநகர் தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது.இதில் 104 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்த பா.ஜ., சட்டசபையில் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்காமல் போனது.

தொடர்ந்து 75 தொகுதிக்கும் மேல்வெற்றி பெற்ற காங்கிரஸ் 30 தொகுதிக்கும் மேல் வெற்றி பெற்ற மஜதவும் இணைந்து ஆட்சி அமைத்தன.நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆர்.ஆர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்றார். இதனையடுத்து காங்கிரசின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்தது. 

பா.ஜ., வேட்பாளர் மரணம் அடைந்ததால் ஜெயநகர் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இத்தொகுதிக்கான தேர்தல் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் சனிக்கிழமை ஓய்ந்தது. இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியாரெட்டிக்கு ஆதரவாக மஜத தன்னுடைய வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளது.

மரணம் அடைந்த பா.ஜ.,வேட்பாளர் விஜயகுமார் தம்பிப பிஎன் பிரகலாத் பா.ஜ., வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.மேலும் காங்கிரஸ் வெற்றி பெறும் பட்சத்தில் தன்னுடைய எண்ணிக்கையை 79 ஆக அதிகரிக்க முனைப்புடன் ஈடுபட்டுள்ளது.

இத்தொகுதியில் காங்கிரஸ்,பா.ஜ., உட்பட 19வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தொகுதியில் ஆண் வாக்களர்கள் 1,02,668 , பெண் வாக்காளர்கள் 2,03,184 மற்றும் மாற்றினத்தவர்கள் 16 பேர் ஓட்டளிக்க உள்ளனர். தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை வரும் 13-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

Ninaivil

திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
10 MAR 2019
Pub.Date: March 15, 2019