'குடி'ஆசாமிகளை பிடிக்க மோப்ப நாய்கள்: பீகார் போலீஸ் அதிரடி

குடிபோதை ஆசாமிகளை சோதனை செய்து பிடிக்கும் பணியில் மோப்ப நாய்களை பயன்படுத்த பீகார் மாநில காவல் துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து பீகார் மாநில கூடுதல் போலீஸ் அதிகாரி (சிஐடி) வினய் குமார் கூறி இருப்பதாவது: ராணுவம் ,துணை ராணுவம் போன்றவற்றில் போதை பொருளை கண்டுபிடிப்பதில் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் குடிபோதை ஆசாமிகளை கண்டு பிடிப்பதில் இதுவரை யாரும் மோப்ப நாய்களை பயன்படுத்தவில்லை.

தெலுங்காகானா மாநிலத்தில் உள்ள புலனாய்வு ஒருங்கிணைந்த பயிற்சி அகாடமியில் நாய்களுக்கு இது போன்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பீகார் மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் முதல்வர் நிதிஷ்குமார் மாநிலத்தில் மது விலக்குசட்டத்தை அமல் படுத்தினார். மாநில அரசு மது பானங்களுக்கு தடை விதித்த போதிலும் சுமார் 1.15 லட்சம் பேர் தடையை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். 

சட்ட விரோதமாக மது விற்பனை மற்றும் அருந்துவதில் இருந்து விடுபடுவதற்கு மாநில அரசு ஒரு முழுமையான இயக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட மோப்பநாய்கள் வரவழைக்கப்படும். இவைகள் மாநிலத்தில் உள்ள பீகார், முசாபர் பூர், தர்பங்கா மற்றும் பகால்பூர் போலீஸ் மண்டலங்களுக்கு வழங்கப்படும் என கூறி உள்ளார்.

Ninaivil

திரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)
திரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)
யாழ். சங்கானை
அவுஸ்திரேலியா
19 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 21, 2018
திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
யாழ்ப்பாணம்
யாழ். மானிப்பாய், கனடா
15 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 19, 2018
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018