கோட்டாபய தொடர்பில் கவனம் செலுத்தப்படும் ; மஹிந்த

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஒன்றிணைந்த எதிரணியின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை நிறுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்தை, கவனத்தில் கொள்ளப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்கு வலுவடைந்து வரும் ஆதரவு குறித்து, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே, அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

“கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இருக்கும் ஆதரவை நான் அறிவேன். 2020 ஜனாதிபதி தேர்தலில் ஒன்றிணைந்த எதிரணியின் வேட்பாளர் யார் என்று தீர்மானிக்கும் போது, கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பான பொதுமக்களின் கருத்தும் கவனத்தில் கொள்ளப்படும்.

எனக்கும் எனது சகோதரர்களுக்கும் இடையில் பிளவுகள் இருப்பதாக கூறப்படுவது பொய். எமக்குள் எந்த அதிகாரப் போட்டியும் கிடையாது. எனது சகோதரர்களுடன் இணைந்து நாட்டில் வணிகம் செய்வதாக குற்றம்சாட்டியவர்கள் தான் அவ்வாறு கூறுகிறார்கள்.

ஒன்றிணைந்த எதிரணியில் இருப்பவர்கள் ராஜபக்ஷக்கள் மட்டுமல்ல. ஏனைய பல அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

Ninaivil

திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018