ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் முரண்படுகள் இல்லை - துமிந்த

தேசிய அர­சாங்­கத்தில் பிர­தான இரண்டு கட்­சிகளுக்கிடையில் கருத்து முரண்­பா­டுகள் உள்­ளன. ஆனால் அவற்றை பேச்­சு­வார்த்­தைகள் மூல­மாக வெற்­றி­கொண்டு தேசிய அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்­தவே முயற்­சித்து வரு­கின்றோம்.

தேசிய அர­சாங்­கத்தில் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடையில் முரண்­பா­டுகள் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தேசிய அமைப்­பாளர் அமைச்சர் துமிந்த திசா­நா­யக தெரி­வித்தார்.

தேசிய அர­சாங்­கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி வெளி­யேற வேண்டும் என தொடர்ச்­சி­யாக கட்­சியின் 16 பேர் கொண்ட சுயா­தீன அணி­யினர் தெரி­வித்து வரு­கின்ற நிலையில் அது குறித்து வின­விய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறு­கையில், 

நாட்டின் பிர­தான பிரச்­சி­னை­களை வெற்றி கொள்­வதில் இன்று எமக்கு பாரிய சவால்கள் உள்­ளன. பிர­தான இரண்டு கட்­சி­களும் இணைந்தே இந்த சவால்­களை வெற்­றி­கொள்ள வேண்­டி­யுள்­ளது. எனினும் தேசிய அர­சாங்­கத்தில் குழப்­பங்கள் உள்­ள­தாக கூறும் கதைகள் அனைத்­தமே பொய்­யா­ன­வை­யாகும். பிர­த­மரும் ஜனா­தி­ப­தியும் முரண்­ப­டு­வ­தாக கூறி மக்­களை சிலர் குழப்பி வரு­கின்­றனர். எமது அணி­யிலும் சிலர் அவ்­வா­றான தவ­றான கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். 

எனினும் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடையில் எந்த முரண்­பா­டு­களும் இல்லை. கருத்து கூறு­வதன் மூல­மாக சில தவ­று­களை சுட்­டிக்­காட்­டு­வதை  ஜனா­தி­பதி பிர­த­ம­ருடன் முரண்­ப­டு­கின்றார் என்ற அர்த்தம் கொள்­ளத்­தே­வை­யில்லை. தொடர்ந்தும் தேசிய அர­சாங்­க­மாக பய­ணிக்க இரு­வ­ருமே தயா­ராக உள்­ளனர். 

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யி­ன­ருக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் இடையில் கொள்கை ரீதி­யி­லான பிரச்­சி­னைகள் இருக்­கலாம். ஆனால் அவற்றை பேச்­சு­வார்த்­தைகள் மூல­மாக வெற்­றி­கொள்ள முடியும், அதேபோல் எமது கட்­சியில் உள்ள முரண்­பா­டு­க­ளையும் வெற்­றி­கொள்ள முடியும். 

உட­ன­டி­யாக தேசிய அர­சாங்­கத்தை கலைக்க முடி­யாது. ஜனா­தி­பதி ஒரு கட்­சியில் இருக்­கையில் நாம் கட்­சியை விட்டு வெளி­யேறி இறு­தியில் ஜனா­தி­ப­தியை நெருக்­க­டியில் தள்ள முடி­யாது. 

ஆகவே புரிந்­து­ணர்வு அடிப்­ப­டையில் பிர­தான இரண்டு கட்­சி­களும் இணைந்து பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது என்றார்.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019