தமிழ்ச் செம்மல் "விருது பெற்ற நகரத்தார்களுக்கு கருவூர் நகரத்தார் சங்கத்தின் பாராட்டுவிழா!

கருவூர் நகரத்தார் சங்கம் சார்பில் 10.6.2018 ஞாயிறு மாலை கருவூர் ஆர்த்தி ஹோட்டல் அழகம்மை மஹாலில் தமிழ்ச் செம்மல் தமிழ்நாடு அரசு வழங்கிய விருதினைப் பெற்ற கருவூர் நகரத்தார் சங்கச் செயலர் மேலை - பழனியப்பன், திருவாரூர் மருத்துவர் மீனாட்சி சுந்தரம், காரைக்குடி தேவி நாச்சியப்பன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

சங்கத் தலைவர் அக்ரி.சுப.செந்தில்நாதன் தலைமை தாங்கி தலைமை உரையில் நகரத்தார் சங்கத்தின் சிறப்பான ஆன்மிக அறச் சேவைகளை விளக்கினார்

பொருளாளர் கும் குமரப்பன் சிறப்பான வரவேற்புரை யும், தொகுப்புரை யும் ஆற்றினார்

தொடர்ந்து முன்னிலை உரையை செட்டிநாடு சிமெண்ட் புலியூர் துணைத் தலைவர் PL.முத்துக் கருப்பன், சிகப்பி ஆச்சி,

ஷோபிகா பழனியப்பன் ஆற்றினர்

தலைவர் செந்தில்நாதன் குமரப்பன், கண்டனூர் சோமசுந்தரம், மோகன் முத்தையா, ராமசாமி, மெய்யப்பன், கணேசன் லெட்சுமணன், உண்ணாமலை அன்னம் ஆகியோர் விருதாளர்களுக்கு நூலாடை ,சீல்டு, நிறைவுப் பரிசு வழங்கினர்.

சிறப்புரை ஆற்றிய மதுரை மலர் விழி பழனியப்பன் நகரத்தாரும் தமிழும் நகரத்தாரும் அறமும் நகரத்தார்களுக்கு உலக அரங்கில் உள்ள சிறப்பு பெயரால், உடையால் பேச்சால் நாம் தமிழ் உணர்வில் குறைந்து வருவதை சுட்டிக்காட்டி தமிழுக்காய் பாடுபடும் இவர்கள் சமூக முன்னோடிகள் எனப் பாராட்டினார்

எம்.சி.என் மாணிக்கம் நகரத்தார் சமுதாயத்தின் தனித்துவம், எதையும் கோரிக்கையாக வைக்காத சமுதாயம் கண்ணதாசனின் கவிதைத் தமிழ் சிறப்பு

வாழ்வியலில் வார்த்தைகளைக் கூட மங்கள வார்த்தைகளாக உச்சரிக்கும் உயரிய பண்புகளை எடுத்துக் கூறி இயல்-இசை-நாடகமாய். சேர - சோழ-பாண்டிய நாட்டு பிரதிநிதிகளாய் நகரத்தார் மூவர் விருது பெற்றிருப்பது சிறப்பு என்றார்.

தொடர்ந்து சரஸ்வதி மாணிக்கம், மெய்யப்பன் பாராட்டி தழ் வாசித்து வழங்கினர் 324 A2 அரிமா மாவட்ட ஆளுனர் வெங்கட்ராமன் மேலை பழனியப்பனுக்கு பன்னாட்டு தலைவரின் கையெழுத்துடன் கூடிய பாராட்டுச் சான்றிதல் வழங்கி வாழ்த்தினார். மேலும் பூச்சரம் மாத இதழின் மார்க்கெட்டிங் மேலாளர் கண்ணன் வாழ்த்தினார். இதனை தொடர்ந்து., 

டாக்டர் மீனாட்சி சுந்தரம் திருமதி தேவி நாச்சியப்பன் மேலை பழநியப்பன் மறக்க முடியாத முதல் பாராட்டு எனக் கூறினர்

அகல்யா மெய்யப்பன் நன்றியுரையும் இரவு விருந்தும் சிறப்பாக நடைபெற்றது.

புகைப்பட விளக்கம் ;;;

விழாவில் எம்.சி.என் மாணிக்கம் பேசுகிறார் உடன் மலர் விழி பழனியப்பன், மேலை பழநியப்பன், தலைவர் செந்தில்நாதன், டாக்டர் மீனாட்சி சுந்தரம், தேவி நாச்சியப்பன்

Ninaivil

திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018