பினைமுறி மோசடியுடன் தொடர்புடைய அனைவரும் விலக்கப்பட வேண்டும் ;விக்னேஸ்வரன்

பினைமுறி மோசடி தொடர்பில் விரிவான மற்றும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டவிரோதமான முறையில் ஒருவர் பணம் பெற்றுக்கொள்வதாயின் அவருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒருவர் இன்னொருவரிடம் பணம் பெற்றுக்கொள்வது ஒரு பெரிய பிரச்சினையாக காணப்படாவிட்டாலும் பணம் பெற்றுக்கொள்வதற்கான காரணம் ஆராயப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் இலாபத்திற்காக பணம் பெறப்பட்டிருக்குமாயின் அது பாரிய குற்றம் என சுட்டிக்காட்டிய முதலமைச்சர் அவ்வாறான அரசியல்வாதிகள் அரசியலிலிருந்து ஒதுங்க வேண்டும் இல்லாவிட்டால் ஒதுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் எந்தவித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் அவை பொது மக்களுக்கு தெரியும் விதத்தில் வெளிப்படையாக காணப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019