629 குடியேற்றவாசிகளுடனான மீட்பு கப்பலுக்கு இத்தாலி அனுமதி மறுப்பு

இத்தாலியின் புதிய உள்துறை அமைச்சு 629 குடியேற்றவாசிகளை ஏற்றிவந்த மீட்பு கப்பல் ஒன்றுக்கு அந்நாட்டு துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி மறுத்த நிலையில் மத்தியதரைக்கடலில் அந்தக் கப்பல் நிர்க்கதியாகியுள்ளது.

மோல்டா இவர்களை ஏற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சரும் இத்தாலி இடதுசாரி லீக்கின் தலைவருமான மாட்டியோ சல்வினி வலியுறுத்தியபோதும் அதனை மோல்டா நிராகரித்துள்ளது.

ஜெர்மன் தொண்டு அமைப்பால் லிபிய கடற்பகுதியில் மீட்்கப்பட்ட இந்த குடியேறிகள் இத்தாலி அதிகார எல்லைக்குள்ளேயே வருவதாக மோல்டா கூறியுள்ளது.

வட ஆபிரிக்க குடியேறிகள் ஐரோப்பாவுக்குள் நுழைவதற்கான பிரதான வாயிலான இத்தாலி உள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தாலியின் அண்மைய பொதுத் தேர்தலில் இடதுசாரி லீக், குடியேற்றவாசிகள் தொடர்பில் கடும் நிலைப்பாட்டை வெளியிட்டு வந்தது.

இந்நிலையில் குடியேறிகளை ஏற்றிய கப்பலை அதன் தற்போதைய நிலையான இத்தாலியில் இருந்து 35 கடல்மைல் தொலைவு மற்றும் மோல்டாவில் இருந்து 27 கடல்மைல் தொலைவில் இருக்கும்படி இத்தாலி கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.

லிபிய கடற்பகுதியில் இடம்பெற்ற ஆறு வெவ்வெறு நடவடிக்கைகளில் இந்த குடியேறிகள் மீட்கப்பட்டதாக எஸ்.ஓ.எஸ் மெடிடெர்ரனி என்ற தொண்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

“அகுவாரியஸ் கப்பலில் இருக்கும் 659 பேரையும் பாதுகாப்பாக கரைசேர்ப்பதே எமது நோக்கமாகும். இவர்களில் சிலர் நேற்று இரவு (ஞாயிறு) மோசமான நிலையில் மீட்கப்பட்டனர்” என்று குறித்த தொண்டு அமைப்பின் பேச்சாளர் மதில்டே அவில்லை என்பவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

படகில் இருப்பவர்களை பாதுகாப்பாகவும் விரைவாகவும் தரையிறக்குவதற்கு அரசுகள் விரைவான தீர்வொன்றை எட்ட வேண்டும் என்று இத்தாலியின் ஐ.நா அகதி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

லிபியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடற்பகுதியில் இருந்தே பெரும்பாலான குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டுள்ளனர். ஆபிரிக்க துணை சாஹாராவில் இருந்து ஐரோப்பாவுக்குள் நுழைவதற்கான முக்கிய பாதையாக இது உள்ளது.

இதில் சுமார் 400 பேர் இத்தாலி கடற்படை, இத்தாலி கடலோர காவல்படை மற்றும் வர்த்தக கப்பல்களால் மீட்கப்பட்டு அகுவாரியஸுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காப்பற்றப்பட்டு அகுவாரியஸ் கப்பலுக்கு அழைத்துவரப்பட்டவர்களில் எந்த துணையும் அற்ற 123 சிறுவர்கள், 11 குழந்தைகள் மற்றும் ஏழு கர்ப்பிணி பெண்கள் இருப்பதாக எஸ்.ஓ.எஸ் மெடிடெர்ரனி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
யாழ். கொக்குவில்
கனடா
05 JAN 2019
Pub.Date: January 8, 2019