முன்னாள் பிரமாதமான பிரதமர் வாஜ்பாய் குறித்து 15 முக்கிய தகவல்கள் இதோ!

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், பாஜ.,கவை பிடிக்காதவர்களுக்கு பிடித்தமான பிரதமராக திகழ்ந்தார். அவரைப் பற்றி 15 முக்கிய தகவல்களை இங்கு பார்ப்போம். 

வாஜ்பாய் 1924ம் வருடம் டிசம்பர் 25ம் தேதி மத்தியபிரதேசத்தில் உள்ள குவாலியரில் பிறந்தார்.

அவரின் இளம்வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியதால் சிறை சென்றவர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜன சங்குக்கு ஆதரவாக செயல்படுவதற்கு முன் கம்யூனிசத்தில் இருந்தார்.

1950ல் சட்டக் கல்லூரியின் படிப்பை பாதியில் நிறுத்தி ஆர்.எஸ்.எஸ் இதழில் பணியாற்றினார். ஆர்.எஸ்.எஸ் இல் இருந்த போதே பாஜக.,வின் தாக்கம் ஏற்பட்டது.

1942 - 1945 வரை இந்தியாவில் நடைப்பெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தீவிரமாக கலந்து கொண்டார். கம்யூனிஸத்திலிருந்து வெளிவந்த வாஜ்பாய் ஆர்.எஸ்.எஸ் இல் சேர்ந்தார்.

அதன் பின்னர் பாஜக.,வில் சேர்வதற்கு முன்னர் பாரதிய ஜன சங் கட்சியின் நிறுவனர் ஸ்யாமா பிரசாத் முகர்ஜியை பின்பற்றியும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

காஷ்மீர் இந்தியாவில் இணைக்கப்பட்டிருந்தாலும், முஸ்லீம்கள் அதிகம் வாழும் காஷ்மீரில் இந்தியாவின் மற்ற பகுதியினர் நுழைவதற்கு பல சிக்கல்கள் இருந்தன. இந்தியாவிலிருந்து தனிமைப்படுத்தி பார்ப்பதற்கு எதிராக 1953ல் போராட்டத்தில் ஈடுபட்டார். வாஜ்பாய் இந்த போராட்டத்தில் பக்க பலமாக இருந்தார். இந்த போராட்டம் வெற்றி பெற்ற சில வாரங்களில் ஸ்யாமா பிரசாத் முகர்ஜி உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இந்த போராட்டம் இளம் வாஜ்பாய்க்கு திருப்புமுனையாக அமைந்தது.

முகர்ஜியின் வழிவந்த வாஜ்பாய் 1957 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.

1957 முதல் 10 முறை அவர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 2009ல் அரசியலில் மும்முரமாக செயல்படுவதிலிருந்து ஒதுங்கும் வரை அரசியலில் சிறப்பாக இருந்தார்.

பாஜக சார்பில் 5 வருடங்கள் முழுமையாக முதலில் ஆண்ட பிரதமர் என்ற பெருமையை வாஜ்பாய் பெற்றார்.

1996ல் முதல் முறையாக பிரதமர் பொறுப்பேற்ற வாஜ்பாய் 13 நாட்களில் பெரும்பான்மை நிரூபிக்கமுடியாமல் பதவி இறங்கினார்.

1998ல் மீண்டும் பிரதமரான வாஜ்பாய் 13 மாதங்களில், அதிமுக தனது ஆதரவை திரும்பப்பெற்றதால் ஆட்சி கவிழ்ந்தது.

1999ல் மறுதேர்தலில் பாஜக வெற்றி பெற்று வாஜ்பாய் 5 வருடங்கள் பிரதமராக இருந்தார்.

மொராஜி தேசாய் பிரதமராக இருந்த பொழுது, வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த வாஜ்பாய், ஐ.நா.,வில் ஹிந்தியில் பேசியது பாராட்டப்படக்கூடியதாக இருந்தது.

இந்தியாவுக்கும் - பாகிஸ்தானின் லாகூருக்கும் இடையேயான பேருந்து வசதியை செய்ததன் எதிரொலியாக, கிளம்பிய எதிர்ப்பால் அடுத்து காங்கிரஸ் சார்பாக பிரதமராக மன்மோகன் சிங் வர காரணமாக அமைந்தது.

திருமணம் செய்து கொள்ளாத வாஜ்பாய் எழுதிய கவிதைகள், அவரின் கட்சியில் மேற்கோள் காட்டி பேசும் அளவுக்கு இருந்தது.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
யாழ். கொக்குவில்
கனடா
05 JAN 2019
Pub.Date: January 8, 2019