விஸ்வரூபம் 2 படத்திற்கு எதிர்ப்பு வந்தால் அரசியல்வாதியாக எதிா்கொள்வேன் – கமல்

விஸ்வரூபம் 2 படத்திற்கு எதிா்ப்பு வரும் பட்சத்தில் அதனை அரசியல்வாதியாக எதிா்கொள்வேன் என்று கமல்ஹாசன் தொிவித்துள்ளாா். 

விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலா் நேற்று வெளியானது. இதனைத் தொடா்ந்து பத்திாிகையாளா்களிடம் பேசிய கமல்ஹாசன், விஸ்வரூபம் 2 படம் தாமதமாக வெளியாவதற்கு தயாரிப்பு நிறுவனமோ, நானோ காரணமல்ல. இப்படத்தின் முதல் பாகம் தாமதமானதற்கு என்ன காரணம், யாா் காரணம் என்று அனைவருக்கும் தொியும். 

இப்படத்தின் டிரைலா் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், உலகின் பல்வேறு நாடுகளில் திரையிடப்பட உள்ளது.

அமெரிக்காவில் ஒரு ஹாலிவுட் திரைப்படம் எத்தனை திரையரங்குகளில் திரையிடப்படுமோ அந்த அளவிற்கு விஸ்வரூபம் 2 திரையிடப்பட உள்ளது. ஹாலிவுட்டிற்கு நிகராக இந்திய படம் திரையிடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகம் முழுவதும் தமிழ் திரைப்படத்தை பாா்க்கும் நிலை வரவேண்டும். 

விஸ்வரூபம் 2 க்கு எதிா்ப்புகள் வராது என்று நம்புகிறேன். ஒருவேளை எதிா்ப்புகள் வரும் பட்சத்தில் அதனை எதிா் கொள்ள அரசியல்வாதியாக நான் தயாராகிவிட்டேன். இப்படத்தில் ஆக்ஷ்ன் தொடா்பான காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருக்கும். சினிமாவையும், அரசியலையும் ஒன்றாக குழப்பிக் கொள்ளக் கூடாது. சினிமா என்று வரும் போது அது சினிமா, அரசியல் என்றால் அது அரசியல் என்று தொிவித்துள்ளாா்.

Ninaivil

திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018