ட்ரம்ப்-கிம் சந்திப்பில் முக்கிய பங்கு வகிக்கும் சிங்கப்பூர் தமிழ் அமைச்சர்கள் சண்முகம்,பாலகிருஷ்ணன்

உலக வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வான அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் சிங்கப்பூர் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சர்களாக இருக்கும் தமிழர்களான டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் சண்முகம் ஆகியோர் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

அமெரிக்காவும் வடகொரியாவும் கீரியும் பாம்புமாக சீறிக் கொண்டிருக்கும் நாடுகள். இந்த இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர்.

இந்த இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் தமிழரான டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் சட்டம், உள்துறை அமைச்சராக இருக்கும் சண்முகம் எனும் இரு தமிழர்கள்தான்.

மருத்துவம் படித்த பின்னர் அரசியலுக்கு வந்தார் டாக்டர் பாலகிருஷ்ணன். ட்ரம்ப்-கிம் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் பாலகிருஷ்ணன், இரு தலைவர்களது சந்திப்பு மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருக்கிறோம். அனைத்தும் நன்மையில் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வடகொரியா அதிபர் கிம் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த விரும்புகிறார் என நம்புகிறேன் என்றார். மேலும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ட்ரம்ப், கிம் ஆகியோரை வரவேற்றது, இருவரது சந்திப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது உள்ளிட்ட விவரங்களை இருவருமே தங்களது சமூக வலைதளங்களில் அப்டேட் செய்தும் வருகின்றனர்


 

Ninaivil

திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திருகோணமலை
கனடா
22 யூன் 2018
Pub.Date: June 23, 2018
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018