மைத்திரி களமிறங்கினால் ஆதரவு இல்லை; பீரிஸ்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக களமிறங்கினால், அவருக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பு, பொது ஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மாத்திரம் இருக்கவில்லை எனவும், அரசாங்கத்தின் உயர்பீடமும் அவரே எனவும் பேராசிரியர் பீரிஸ் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச மற்றும் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, ஆகியோர் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி சிறிசேனவை நியமிக்கவுள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தை வலியுறுத்தினார்.

எனினும், 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்த பொது ஜன பெரமுனவை போன்ற கொள்கையைக் கொண்ட அரசியல் கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணியை அமைக்கவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளால் துன்பத்தை அனுபவித்து வருவதாகவும், மேலும் ஐந்து வருடங்களுக்கு மக்கள் இதே நிலைமையை அனுபவிக்கக்கூடாது என்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019