இடியாப்ப சிக்கலில் சிக்கி தவிக்கும் ஷமி: இங்கிலாந்து தொடர் தான் கெடு!

தொடர்ந்து சிக்கல் மேல் சிக்கலை சந்தித்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்குள் மனதளவிலும் உடல் அளவிலும் தயாராகவேண்டும் என பிசிசிஐ., எதிர்பார்க்கிறது. 

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. சமீபத்தில் இவர் மீது இவரது மனைவி பல பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக அடுக்கினார். 

தவிர, இவர் மேட்ச் பிக்சிங்கிலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். இதை விசாரித்த பிசிசிஐ., ஷமி, எவ்வித மேட்ச் பிக்சிங்கிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்து, ஐபிஎல்., தொடரில் பங்கேற்க அவருக்கு அனுமதி அளித்தது. இதைதொடர்ந்து முகமது ஷம மீது, கொல்கத்தா காவல்நிலையத்தில் ஷமி மீது விசாரணை நடக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஆப்கான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி இடம் பெறுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உடற்தகுதி தேர்வில் முகமது ஷமி தோல்வியடைந்ததையடுத்து இவருக்கு மாற்று வீரராக நவ்தீல் சாய்னி அணிவிக்கப்பட்டார். 

இடியாப்ப சிக்கல்: 

இப்படி மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொடர்ந்து சிக்கல் மேல் சிக்கலை சந்தித்து வரும் முகமது ஷமி, இங்கிலாந்து தொடருக்கு முன்பாக தயாராக வேண்டும் என இந்திய அணி நிர்வாகம் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு பிசிசிஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘ஷமியின் கிரிக்கெட் திறமை குறித்து எவ்வித சந்தேகமும் இல்லை. அவர் வழக்கம் போல சிறப்பாக செயல்படுகிறார். ஆனால் அணி, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் அவரை பழையபடி பார்க்க விரும்புகிறது. இங்கிலாந்து தொடருக்கு அவர் அவசியம் தேவை.’ என்றார். 

Ninaivil

திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019