மாங்குளத்தில் தண்ணீர் இல்லை; காணியாளர் அலுவலகத்தினை அமைக்க முடியாது: சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண காணியாளர் அலுவலகத்தினை கிளிநொச்சியில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். குறித்த அலுவலகத்தினை மாங்குளத்தில் அமைப்பற்காக ஆய்வுசெய்தபோது தண்ணீர் இல்லை.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண சபையின் நேற்றைய (செவ்வாய்க்கிழமை) அமர்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நீர் வசதி உட்பட ஏனைய அடிப்படை வசதிகளையும் கருத்தில் கொண்டு மாகாண காணியாளர் அலுவலகத்தை கிளிநொச்சியில் அமைப்பதற்கு ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சியில் 255வது மைல் கல் பகுதியிலும் கிளிநொச்சி பழைய கச்சேரிப் பகுதியிலும் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. விரைவில் வேலைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எமது அமைச்சினால் எடுக்கப்படவுள்ளது. இதை அமைப்பதற்கான பணம் பிரதம செயலாளர் வசம் இருக்கின்றது. இது தொடர்பான வேலைகள் தொடங்கியதும் பணம் வழங்கப்படும். விரைவில் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும்.

இதேவேளை 2014ஆம் ஆண்டு கொரியாவில் இருந்து இதற்கான நிபுணர்கள் வருகை தந்திருந்தார்கள். அவர்களின் ஆய்வில் மாங்குளத்தில் அடையாளம் காணப்பட்ட இடத்தில் நிலத்தின் கீழ் பாறைகள் இருப்பதாகவும் இதற்கான நீரை வவுனிக் குளத்தில் இருந்து அல்லது வேறு இடத்தில் இருந்தே எடுத்துவர வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.

இதனை நாங்கள் கூறவில்லை. நிபுணர்களாலேயே கூறப்பட்ட தரவாகும். நீரை மாத்திரமன்றி அனைத்து விடயங்களையும் கருத்தில் எடுத்தே இதனைச் செய்துள்ளோம். அனைத்து வசதிகளையும் கொண்ட காணி கிடைக்கும் என்றால் அதற்கான திட்டங்களை வேகமாக செய்வோம்.” என்றுள்ளார்.

Ninaivil

திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018
திரு ஆறுமுகம் சண்முகம்
திரு ஆறுமுகம் சண்முகம்
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி இராமநாதபுரத்தை
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 9, 2018
திருமதி திருநாவுக்கரசு வாசுமதி (இராசாத்தி)
திருமதி திருநாவுக்கரசு வாசுமதி (இராசாத்தி)
யாழ். மாதகலை
கொழும்பு பம்பலப்பிட்டி
விண்ணில் : 6 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 8, 2018