கால்பந்தாட்டம் உலக கிண்ண போட்டிகள் ரஷ்யாவில் இன்று ஆரம்பம்

21வது பிபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் இன்று ரஷ்யாவில் கோலாகலமாக ஆரம்பமாகிறது.

ஆரம்ப விழா வைபவங்கள் லுஜ்னிகி மைதானத்தில் இன்று மாலை இலங்கை நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகின்றன. இன்றயை ஆரம்ப விழா நிகழ்ச்சியை 80 ஆயிரம் பார்வையாளர்கள் மைதானத்தில் அமர்ந்து ரசிக்கக் கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்படடுள்ளன. மேலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சியில் ரசிக்கவுள்ளனர். இவ்வாரம்பவிழா வைபவத்தில் ரஷ்ய நடனக் கலைஞர்களான அய்டா கரிபுல்லானாவின் இசை நிகழ்ச்சியும்.

நடன விருந்துகளும், கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. இவ்விழாவில் 500 நடனக் கலைஞர்கள் பங்கு கொள்கின்றனர். விசேடமாக இங்கிலாந்து இசைக்கலைஞர் ராபிடே வில்லியம்ஸின் இசை நிழகச்சிகளும் இடம்பெறவுள்ளதுடன்.

மேலும் கண்கவர் வானவேடிக்கைகளுடன் ஆரம்பமாகும் இன்றை ஆரம்பவிழா நிகழ்வில் ரஷ்ய கலாசார நடனங்களையும் சாசக நிகழ்சிகளையும் காட்சிப்படுத்தவுள்ளனர்.

ஜிம்னாஸ்டிக் வீரர்களின் வியப்பூட்டும் நிகழ்ச்சிகளும் இந்த ஆரம்பவிழாவை அலங்கரிக்கவுள்ளன. உலகக் கிண்ணத் தொடரில் இரு முறை தங்க பாதணி வென்ற பிரேசிலில் கால்பந்தாட்ட ஜாம்பவான் ரொனால்டோவும் இவ் ஆரம்ப நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

21வது பிபா உலகக் கிண்ண அதிகாரபூர்வ பாடலான ‘லைவ் இட் அப்’ என்ற பாடலை வில் சுமித்தும், நிக்கி ஜோப்பும் இணைந்து அரங்கேற்றவுள்ளனர்.

ஆரம்ப நிகழ்வுகளின் பின் தொடரின் முதலாவது போட்டியாக இன்று இரவு 8.30க்கு குழு ஏ யில் இடம்பெற்றுள்ள சவூதி அரேபியாவும்- ரஷ்யாவும் மோதவுள்ளன. ஆசியப் பிராந்தியத்தில் பலம்வாய்ந்த அணியான ‘சவூதி பச்சைக் கழுகு’ என அழைக்கப்பட்டு வரும் சவூதி அணி சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளன தரப்படுத்தலில் 63வது இடத்திலேயேயுள்ளது.

33வயதுடைய ஒஸாமா நவஷாவியின் தலைமையில் களமிறங்கும் சவூதி அரேபிய அணியில் ஆஜன்டீனாவின் முன்னாள் பிரபல வீரர் ஜுவான் அந்தோனியோ பிஸ்ஸி பயிற்சியாளராகவுள்ளார்.

ரஷ்ய அணியைப் பொறுத்த வரையில் உலக தரவரிசையில் 70 இடத்திலேயே உள்ளது. மேலும் உலகக் கிண்ண தொடர்களில் 1966ம் ஆண்டு நான்காவது இடத்துக்கு வந்ததே அவ்வணியின் உச்சபட்ச உலகக்கிண்ண சாதனையாகும்.

சொந்த மண்ணில் நடைபெறுவதே அவ்வணிக்குக் கூடுதலான அனுகூலமாகும். இரு அணிகளும் சமபல அணியாகவுள்ளதால் இரு அணிகளுக்கும் இன்றைய ஆரம்பப் போட்டி கடும் சவாலாக அமையப் போகின்றது.

இம்முறை கடந்த உலகக் கிண்ணத்தில் வழங்கிய பரிசுத் தொகையை விட வழங்கப்படவுள்ள பரிசுத்தொகை அதிகமாகும்.

கடந்த முறை பிரேசிலில் நடைபெற்ற 20வது உலகக் கிண்ணச் சாம்பியனுக்கு 35 மில்லியன் அமெரிக்க டொலர்களே பரிசாக வழங்கப்பட்டது.

ஆனால் இம்முறை இது 38 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018