நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் எழுதிய சிறப்பு பாடல்

தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா நடித்து வரும் படத்திற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் சிறப்பு பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `இமைக்கா நொடிகள்', `கொலையுதிர் காலம்', `கோலமாவு கோகிலா' அஜித்தின் விஸ்வாசம், தெலுங்கில் ஜெயசிம்ஹா, மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார்.

இதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 6 பாடல்களுக்கும் அனிருத் இசையமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் இருந்து `எதுவரையோ' என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் சிவகார்த்திகேயன் எழுதிய ‘கல்யாண வயசு’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

அடுத்ததாக மூன்றாவது பாடலை வெளியிட இருக்கிறார் அனிருத். இந்த ‘ஒரே ஒரு...’ என்று தொடங்கும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதி இருக்கிறார். நாளை இரவு 7 மணிக்கு இந்த பாடலை அனிருத் வெளியிட இருக்கிறார்.

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில், நயன்தாராவிற்காக இந்த பாடலை அவர் எழுதியிருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019