மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

5 ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் கொண்ட தொடருக்கான ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. 

லண்டன் நகரின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்சு மற்றும் டிராவிஸ் ஹெட் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அப்போது டிராவிஸ் ஹெட் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து ஆடிய அரோன் பிஞ்சு 19 ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அதற்கு பிறகு ஷான் மார்ஷ், மார்க்ஸ் ஸ்டாயினஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அப்போது ஷான் மார்ஷ் 24 ரன்களிலும், மார்க்ஸ் ஸ்டாயினஸ் 22 ரன்களிலும் ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனார். அடுத்ததாக வந்த கேப்டன் டிம் பெய்ன் பெரியளவில் சோபிக்காமல் 5 விக்கெட் இழப்புகளில் 90 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்திருந்தது. 

தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல். ஆஷ்டன் அகார் நிதானமாக விளையாடத் தொடங்கினார். அரைசதம் கடந்த மேக்ஸ்வெல் 62 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஷ்டன் அகார் 40 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து களமிறங்கிய ஆண்ட்ரு டை 19 ரன்கள் அடுத்த நிலையில், தொடர்ந்து மைதானத்திற்கு வந்த ஆஸ்திரேலியா அணிவீரர்கள் பெரியளவில் ரன்கள் எடுக்க முடியாமல் தவித்தனர். 

இந்நிலையில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 47 ஓவர்கள் முடிவில் 214 ரன்களை எடுத்தது. பந்து வீசிய இங்கிலாந்து அணியில் மொயின் அலி, லியாம் பிளங்கீட் இருவரும் 3 விக்கெட்டுகளும், அடில் ரஷித் 2 விக்கெட்டுகளும் எடுத்திருந்தனர். 

தொடர்ந்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினார். 

ஜேசன் ராய் 2வது பந்தில் டக்-அவுட் அகி பெவிலியன் திரும்பிய நிலையில், அடுத்து களமிறங்கிய அலெக்ஸ் ஹேல்ஸ் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஜானி பேர்ஸ்டோவ் 28 ரன்களில் எடுத்து அவுட் ஆனார். 

பிறகு களமிறங்கிய ஜோ ரூட், இயான் மார்கென் நிதானமாக விளையாடி இருவரும் அரைசதம் கடந்தனர். அப்போது இயான் மார்கென் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர் 11 முறை பவுண்டர்களை விளாசி மைதானத்தில் ரன் மழை பொழிந்தார். 

அவரை தொடர்ந்து ஆட்டத்தில் களமிறங்கிய பட்லர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஜோ ரூட் 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பிறகு வந்த மோயின் அலி 17 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். 

இறுதியாக வந்த டேவிட் வில்லே இங்கிலாந்து அணிக்கு சிக்ஸர்களை அடித்து 35 ரன்கள் எடுத்து வெற்றி பெறச் செய்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 44 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. 

ஆஸ்திரேலியா அணிக்கான பந்துவீச்சில் பில்லி ஸ்டான்லேக், மைக்கேல் நிசர், ஆண்ட்ரூ டை ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். தொடர்ந்து இங்கிலாந்தில் மொயின் அலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

5 போட்டிகள் மற்றும் டி 20 கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை விட முன்னில்லை பெற்றுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கான இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் 16ம் தேதி கார்டிப் மைதானித்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா Columbus Ohio
17 APR 2019
Pub.Date: May 13, 2019
திருமதி நிர்மலா செல்வநாயகம்
திருமதி நிர்மலா செல்வநாயகம்
யாழ். இளவாலை
கனடா
11 MAY 2019
Pub.Date: May 12, 2019
செல்வி ஜெசி ஜெகசீலன்
செல்வி ஜெசி ஜெகசீலன்
இங்கிலாந்து
Bristol
16 APR 2019
Pub.Date: May 10, 2019