சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் - மன்னாரில் மீட்கப்பட்ட எச்சங்கள் மீது ஐயம்!

மன்னார் சதோச மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டுவரும் மனித எச்சங்கள், கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பணியாற்றும் சட்டத்தரணிகள் குழாம் இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளது.

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் மனித எச்சங்களை தேடும் பணிகள் நேற்று புதன்கிழமை 13 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுவந்த இந்த அகழ்வுப் பணிகள் மாலை வரை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இரண்டு முழு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதில் ஒன்று இரண்டு கைகளும் ஒன்றின் மேல் ஒன்று இருந்த நிலையில் காணப்படுவதால் அது கட்டப்பட்ட ஒன்றாக இருக்கலாம் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பணியாற்றும் சட்டத்தரணிகள் குழாம் கூறியுள்ளது.

நேற்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது முழு மனித எலும்புக் கூடு மற்றும் விரல் ஒன்றில் மோதிரம் போன்ற இரும்பொன்று காணப்பட்டதாக  தெரிவித்தார்.

இது இரும்புகளால் கட்டப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவரின் மனித எச்சமாக இருக்கலாம் எனவும் சட்டத்தரணிகள் குழாம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக நகர நுழைவாயில் என்பதால் 1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இருந்து இந்தப் பகுதியில் இராணுவப் பிரசன்னம் காணப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் முன்னைய காலப் பகுதியில் இந்தப் பகுதியில் வைத்து தம்மை இராணுவத்தின் சோதனைக்கு உட்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றதாக மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை செபமாலை உள்ளிட்ட பிரதேச மக்களும் கூறியுள்ளனர்.

இதனிடையே இந்த மனித புதைகுழியில் முழுமையான மனித எலும்புக்கூடு ஒன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டதால் சற்று பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வரழைக்கப்பட்டிருந்தனர்.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா நேற்றைய அகழ்வு பணிகளை பார்வையிட்டு சென்ற நிலையில் மாலை 5.30 மணியளவில் நுற்றுக்கணக்கான மக்கள் அகழ்வு பணிகள் இடம்பெற்ற இடத்தை சூழ்ந்து கொண்டதை அடுத்தே இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து கூடி நின்ற மக்களை அங்கிருந்து வெளியேற்றிய பொலிஸார் நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக  தெரிவித்தார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 29 மண்டையோடுகளுடன் கூடிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டடோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணியொருவர் தெரிவித்தார்.

அகழ்வு பணிகளில் களனி பல்கலைக்கழக 'தொல்பொருள்' அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும் பயிற்சி நிலையைச் சேர்ந்த நான்கு வைத்திய அதிகாரிகள் மற்றும் பல் நிபுணத்ததுவ வைத்திய அதிகாரி ஒருவம் இணைந்திருந்தனர்.

விசேட சட்டவைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினரும் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினருடன் இணைந்து இந்த அகழ்வு பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019