ஜெயலலிதாவின் கொள்கைப்படி சென்னையை குடிசைகள் இல்லா நகராக மாற்றிக் காட்டுவோம்

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, தி.மு.க. உறுப்பினர் அரவிந்த் ரமேஷ்(சோழிங்கநல்லூர் தொகுதி), ‘சென்னையில் உள்ள குடிசை பகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் கண்ணகி நகருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு குடிநீர் வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகள் முறையாக இல்லை. வழிபாட்டு தலங்கள் கூட இல்லை’ என்று துணை கேள்வி எழுப்பினார்.

அதற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசியதாவது:-

குடிசைப்பகுதி மக்களை குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு மறுகுடியமர்த்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கூவம் நதிக்கரையில் வசிக்கும் குடிசைப்பகுதி மக்களுக்கு பெரும்பாக்கத்தில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் 8 ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள் உள்பட அடிப்படை வசதிகளுடன் கூடிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

மத வழிபாட்டு தலங்கள் எப்போதும் அரசால் கட்டி தரப்படாது. சென்னையை பொறுத்தவரை குடிசையற்ற மாநகராக மாற்றுவது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இலக்கு. தற்போது அரசு அதை தொடர்ந்து செய்து வருகிறது. சென்னையை குடிசைகள் இல்லா நகராக மாற்றிக்காட்டுவோம்.

இவ்வாறு அவர் பேசினார். 

Ninaivil

திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
வவுனியா பாவற்குளம்
ஜெர்மனி
10 FEB 2019
Pub.Date: February 12, 2019
திருமதி சந்திரா இராஜரட்ணம்
திருமதி சந்திரா இராஜரட்ணம்
யாழ். கட்டுடை
கனடா
09 FEB 2019
Pub.Date: February 11, 2019

Event Calendar