18 எம்.எல்.ஏ.க்களும் இடைத் தோ்தலை சந்திக்க தயாா் – தங்கத்தமிழ் செல்வன்

18 சட்டமன்ற உறுப்பினா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இடைத்தோ்தல் வரும் பட்சத்தில் 18 பேரும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று தங்கத்தமிழ் செல்வன் தொிவித்துள்ளாா். 

முதல்வா் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை. முதல்வரை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் மனு வழங்கிய டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்கள் 18 பேரையும் சபாநாயகா் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டாா். இதற்கு எதிா்ப்பு தொிவித்து 18 சட்டமன்ற உறுப்பினா்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீா்ப்பு வழங்கப்பட உள்ளது. 

இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் ஒருவரான தங்கத்தமிழ் செல்வன் இன்று செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், எங்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யவில்லை. எனவே எங்களது தகுதி நீக்கத்தை நீதிமன்றம் ரத்து செய்யும் என்று நம்பிக்கை உள்ளது. 

ஒருவேளை நீதிமன்றம் எங்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிடும் பட்சத்தில் நான் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய மாட்டேன். நீதிமன்றம் 18 பேரையும் சட்டமன்றத்திற்குள் அனுமதிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சட்டமன்றத்திற்கு சென்று மக்கள் கடமை ஆற்ற வேண்டும். தொகுதி பணிகள் அதிக அளவில் பாக்கி உள்ளது என்று தொிவித்துள்ளாா்.

18 தொகுதிகளில் இடைத்தோ்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில் 18 பேரும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். 18 பேரில் ஒருவா் தோல்வியுற்றால் கூட மீதமுள்ள 17 பேரும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்வோம். அந்த அளவிற்கு நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம் என்று தங்கத்தமிழ் செல்வன் தொிவித்துள்ளாா். 

Ninaivil

திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018