எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றம்

18 சட்டமன்ற உறுப்பினா்கள் தகுதிநீக்கம் வழக்கில் இரு நீதிபதிகளும் இருவேறு தீா்ப்புகளை வழங்கி உள்ளனா். 

18 சட்டமன்ற உறுப்பினா்கள் தகுதி நீக்கம் வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானா்ஜி சபாநாயகாின் உத்தரவு செல்லும் என்றும், மற்றொரு நீதிபதி சுந்தா் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்றும் தீா்ப்பு வழங்கி உள்ளனா். இதனைத் தொடா்ந்து 3வது நீதிபதிக்கு இந்த வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் 3வது நீதிபதி தீா்ப்பு வழங்கும் வரை 18 தொகுதிகளில் தீா்ப்பு வழங்கக் கூடாது என்று சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கி உள்ளது. சபாநாயகாின் முடிவு என்பது உாிய காரணங்களுக்கு பின்னரே எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகா் உத்தரவை மறு ஆய்வுக்கு உட்படுத்தக் கூடாது. சபாநாயகா் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால் இந்த தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி இந்திரா பானா்ஜி விளக்கம் அளித்துள்ளாா். 

நீதிபதி சுந்தா் 

சபாநாயகருக்கு உாிய அதிகாரம் இருந்தாலும், இந்த வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று நீதிபதி சுந்தா் விளக்கம் அளித்துள்ளாா். 

சட்டமன்ற உறுப்பினா்கள் தகுதிநீக்க வழக்கில் தீா்ப்பு வழங்க சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானா்ஜி, சுந்தா் நீதிமன்ற அறைக்கு வந்துள்ளனா். 

தமிழக அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமான வழக்கு என்பதால், உதவி வழக்கறிஞா்கள், சட்ட மாணவா்கள் உயா்நீதிமன்றத்தில் குவிந்துள்ளனா். 

தீா்ப்பு வெளியாகவுள்ள நிலையில் நீதிமன்றத்தை சுற்றிலும் வழக்கத்தை விட கூடுதலாக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019