மேற்கு வங்காளத்தில் ஒரு அர்ஜெண்டினாவை போல கேரளாவில் ஒரு பிரேசில்

உலகக்கோப்பை கால்பந்து காய்ச்சல் அனைவருக்கும் வந்துள்ள நிலையில், கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு குடும்பம் தனது வீட்டையே பிரேசில் தேசியக்கொடி நிறத்திற்கு மாற்றியுள்ளது.

கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் தீனி போடும் உலகக்கோப்பை போட்டிகள் ரஷியாவில் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் சவுதி அரேபியாவை ரஷியா 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்தியாவில் கிரிக்கெட்டிற்குத்தான் அதிக முக்கியத்தும் இருந்தாலும், கால்பந்து போட்டிக்கும் ஆதரவு அதிகரித்து வருகிறது.

வடகிழக்கு மாநிலங்கள், கொல்கத்தா, கேரளா ஆகிய பகுதிகளில் கால்பந்து ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர். கொல்கத்தாவில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் மெஸ்சியின் தீவிர ரசிகர். ரஷியா செல்ல வசதியில்லாதால், அர்ஜென்டினா அணியின் ஜெர்சி வண்ணத்தை வீடு முழுவதும் அடித்து போட்டியை வரவேற்றிருந்தார்.

கொல்கத்தாவில் டீக்கடை வைத்திருப்பவர் ஷிப் ஷங்கர் பத்ரா. கொல்கத்தாவின் ஆயிரக்கணக்காக அர்ஜென்டினா ரசிகர்களில் இவரும் ஒருவர். இவர் கொஞ்சம் வித்தியாசமானவர்.

இவருடைய ஆசையெல்லாம் ரஷியா சென்று அர்ஜென்டினா போட்டியை நேராக பார்க்க வேண்டும் என்பதுதான். இதற்காக அவர் 60 ஆயிரம் ரூபாய் சேர்த்து வைத்துள்ளார். ஆனால் டிராவல் ஏஜென்ட் ரஷியா சென்று போட்டியை பார்க்க ஒன்றரை லட்சம் ரூபாய் ஆகும் என்று கூறியதால் இவரது கனவு வீணானது.நேரில் சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்ட நிலையில், சற்றென்று அவருக்கு ஒரு ஐடியா வந்தது.

அதன்படி தனது மூன்று மாடி வீட்டிற்கு அர்ஜென்டினா வீரர்கள் அணியும் ஜெர்சியின் கலரை வண்ணமாக பூசி, தன்னுடைய வீட்டை அர்ஜென்டினா அணியாக மாற்றியிருந்தார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியிருந்தது.

இந்நிலையில், கேரளா மாநிலம் கொச்சியில் வசிக்கும் தம்பதி தங்களது வீட்டை பிரேசில் தேசியக்கொடி வண்ணத்திற்கு மாற்றியுள்ளனர்.

பிரேசிலின் வீடு என்று எழுதப்பட்டு வீட்டு சுவர்களில் அந்நாட்டு தேசிய கொடி வண்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சுவற்றில் பிரேசில் அணி வீரர்களின் புகைப்படங்கள் தொங்க விடப்பட்டுள்ளன. இம்முறை பிரேசில் நிச்சயமாக கோப்பையை கைப்பற்றும் என இந்த தம்பதி உறுதிபட தெரிவித்துள்ளனர்.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018