முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா அழைப்பு

விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களான குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன், அரவிந்த டி சில்வா, ரொஷான் மஹாநாம மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரை இலங்கை கிரிக்கெட்டுக்கு ஆலோசகர்களாக வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றார்.

விளையாட்டு அமைச்சரின் முகவரிக்கு எழுதப்பட்ட கடிதமொன்றில், இலங்கை கிரிக்கெட் பிரதான நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா மற்றும் தேசிய அணியின் தேர்வாளர்களும் சேர்ந்து இந்த முன்னாள் நட்சத்திரங்களின் சேவை முக்கிய தீர்மானங்களை எடுக்கும் போது இலங்கை கிரிக்கெட்டுக்கு எந்தளவுக்கு தேவையாக இருக்கின்றது என்பதை விளக்கியிருந்தனர்.

அமைச்சர் பேசுகையில், “ நீதிமன்ற உத்தரவின்படி, எங்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகத்துக்கான தேர்தல்களை தாமதிக்க முடியாது. அதனை எங்களுக்கு விரைவாக எப்போது முடியுமோ அப்போது நடாத்த முடியும். இலங்கை கிரிக்கெட்டை சீரான பாதையில் கொண்டு செல்ல எனது ஆளுமைக்கு முடியுமானவற்றைச் செய்து வருகின்றேன். இதன் ஒரு அங்கமாக, (தேசிய அணியின்) தேர்வாளர்கள் கேட்டுக்கொண்டதன்படி சங்கா, மஹேல, முரளி, அரவிந்த மற்றும் ரொஷான் போன்றோரை இலங்கை கிரிக்கெட் சபைக்கு இலங்கை கிரிக்கெட்டின் உயர்திறன் செயற்பாடுகளுக்கான (High Performance) ஆலோசகர்களாக வருமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்” எனக் கூறியிருந்தார்.

சுழல் பந்து வீச்சாளர்களுக்கு உதவுவதற்காக இலங்கை அணியின் தேர்வாளர்கள் முத்தையா முரளிதரன் ஆலோசகராக வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோர் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த தயாசிரி ஜயசேகரவிடம் இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட்டை விருத்தி செய்வதற்கான திட்டம் ஒன்றை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018