புத்தள நகரில் பெருநாள் விளையாட்டுப் போட்டிகள்

புத்தளம் நகரில் பெருநாள் தினங்களில் நூற்றாண்டு காலமாக நடாத்தப்பட்டு வரும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் இம்முறையும் புத்தளம் இஜ்திமா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) முழு நாளும் நடைபெற்றது.வழமைக்கு மாறாக இம்முறை வரலாற்றில் முதற் தடவையாக குறித்த இந்த பெருநாள் விளையாட்டு போட்டிகளை புத்தளம் நகர சபை முன்னின்று நடாத்தியமை சிறப்பம்சமாகும்.

புத்தளம் நகர பிதா கே ஏ பாயிஸ் தலைமையில் நகர சபை உறுப்பினர்கள் மற்றும் நகர சபை உத்தியோகத்தர்கள் இணைந்து இந்நிகழ்வுதனை சிறப்பாக நடாத்தி முடித்தனர்.

சிறுவர் சிறுமிகளுக்கான நெடு ஓட்டம், சைக்கிளோட்டம், வாலிபர்களுக்கான நெடுஓட்டம், சைக்கிளோட்டம்,

பட்டம் விடும் போட்டி, நீச்சல் போட்டி, பூனை அழகன் போட்டி, சண்டைச் சேவல் அழகன் போட்டி, முயல் அழகன் போட்டி, மாடழகன் போட்டி, ஆடழகன் போட்டி, விநோத உடையலங்கார போட்டி, சகல ரகங்களிலுமான மோட்டார் சைக்கிள் ஓட்டம், குதிரை ஓட்டம், மாட்டு வண்டில் ஓட்டம், ஆள் தூக்கி ஓட்டம், முச்சக்கர வண்டி ஓட்டம், டயருக்குள் மனிதனை திணித்து சுழற்றி செல்லுதல் உள்ளிட்ட மற்றும் பல போட்டிகளும் இடம்பெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கு பெறுமதியான பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

போட்டிக்கு நடுவராக நீண்ட காலம் இத்தகைய பாரம்பரிய போட்டிகளுக்கு நடுவராக கடமையாற்றி வரும் ஏ.எச்.எம். உமர் பாச்சா கடமையாற்றினார்.

Ninaivil

திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
16 யூலை 2018
Pub.Date: July 18, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018