என் அப்பா இதை தான் கற்று தந்தார் - விராட் கோலி

தந்தையர் தினத்தை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பதிவிட்ட டிவிட்டில் அவரது தந்தை அவருக்கு கற்றுக்கொடுத்த முக்கிய பாடும் குறித்து கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கடந்த 16-ம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து அனைவரும் சமூக வலைதளங்களில் தங்கள் தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் மறைந்த அவரது தந்தை பிரேம் கோலிக்கு தந்தையர் தின வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் தனது டுவிட்டரில் தந்தையுடன் சிறுவயதில் எடுத்துகொண்ட புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருந்தார். 

அதில், இந்த தந்தையர் தினம் மறக்கமுடியாத ஒரு நாளாகும், உங்கள் தந்தையுடன் இந்த தினத்தை சிறப்பானதாக ஆக்குங்கள், என பதிவிட்டிருந்தார்.

மேலும், ‘ஆரம்பத்தில் இருந்து கடினமாக உழைக்கவும், என் சொந்த கடின உழைப்பில் முழு நம்பிக்கை வேண்டும் எனவும், மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்க்க கூடாது என்பதையும் எனக்கு, அவர் கற்று கொடுத்தார். அந்த பாடம் இப்போது என் வாழ்வில் முக்கியமாகிவிட்டது. அவர் சரியான திசையில் என்னை வழிநடத்தினார். நன்றி அப்பா!’, எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டு விராட் கோலிக்கு 18 வயது இருக்கும் போது அவரது தந்தை மரணமடைந்தார். அந்த சமயத்தில் அவர் கர்நாடகா - டெல்லி இடையேயான ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடி கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018