பிரேசிலுக்கே ஷாக் கொடுத்தவங்க நாங்க... செர்பியாவுக்கு கெத்து காட்டும் சுவிட்சர்லாந்து!

21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்றில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் நடந்து வருகின்றன. இதில் இ பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை சந்திக்கிறது முன்னாள் சாம்பியன் பிரேசில். மற்றொரு ஆட்டத்தில் செர்பியாவை சந்திக்கிறது சுவிட்சர்லாந்து. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன.

போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன. இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும். அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டாவது ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, சி பிரிவில் இருந்து பிரான்ஸ் ஆகிய மூன்று அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில் இ பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் பிரேசில், கோஸ்டாரிகா விளையாடுகின்றன.

அதற்கடுத்த ஆட்டத்தில் செர்பியா, சுவிட்சர்லாந்து சந்திக்கின்றன. ---- பிரிவு இ செர்பியா - சுவிட்சர்லாந்து போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி இரவு 11.30 மணி ---- இ பிரிவில் இதுவரை... * செர்பியா 1-0 என கோஸ்டாரிகாவை வென்றது. * பிரேசில் 1-1 என சுவிட்சர்லாந்துடன் டிரா செய்தது. இ பிரிவின் புள்ளிப் பட்டியலில் செர்பியா 3 புள்ளிகளுடன் டாப்பில் உள்ளது.

பிரேசில், சுவிட்சர்லாந்து தலா 1 புள்ளியுடன் உள்ளன. கோஸ்டாரிகா கணக்கை துவக்கவில்லை. ----- இ பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வென்றது செர்பியா. இரண்டாவது ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் முன்னாள் சாம்பியனான பிரேசில் விளையாடியது. இந்த ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் பிரேசிலின் பிலிப் கோட்டின்ஹோ கோலடிக்க பிரேசில் 1-0 என முன்னிலை பெற்றது.

சுவிட்சர்லாந்தின் ஜூபர் 50வது நிமிடத்தில் கோலடித்து சமநிலையை உருவாக்கினார். இறுதியில் 1-1 என ஆட்டம் டிராவில் முடிந்தது. அந்த ஆட்டத்தில் உலகின் காஸ்ட்லியான வீரரான பிரேசிலின் நெய்மர் கோல் ஏதும் அடிக்காமல் ஏமாற்றினார். பிரேசிலுடன் ஒப்பிடுகையில் சுவிட்சர்லாந்து ஒரு சாதாரண அணியாக தெரியும்.

ஆனால், இதுவரை மூன்று முறை காலிறுதிக்கு நுழைந்துள்ள சுவிட்சர்லாந்து அணி, 11வது முறையாக உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பது, தொடர்ந்து நான்காவது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்பது என்பது சாதாரண விஷயமல்ல. இந்த நிலையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை பிரேசில் சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் செர்பியா, சுவிட்சர்லாந்துடன் விளையாடுகிறது.

அடுத்தச் சுற்றுக்கு முன்னேறப் போவது யார் என்பதை இன்றைய ஆட்டங்கள் முடிவு செய்யும். அதனால், முதல் ஆட்டத்தில் பிரேசிலுக்கு ஷாக் கொடுத்ததைப் போல, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள செர்பியாவுக்கும் சுவிட்சர்லாந்து ஷாக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018