ஒலிம்பிக் தின ஓட்டப்போட்டி நுவரெலியாவில்

ஒலிம்பிக் தின ஓட்டப்போட்டியில் ஒலிப்பிக் பதக்கம் பெற்றவரான சுசந்திகா, எவரெஸ்ட் மலை ஏறிய ஜயந்தி, ஜோஹான் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ஒலிம்பிக் தின ஓட்டப் போட்டியை எதிர்வரும் 25ம் திகதி திங்கட்கிழமை நுவரெலியாவில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

உலக ஒலிம்பிக் தினம் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 23ம்திகதி கொண்டாடடுவதோடு அத்தோடு இணைந்த அங்கத்துவ நாடுகளின் தேசிய ஒலிம்பிக் சங்கங்களின் நடவடக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் பிரகாரம் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் ஆசீர்வாதத்துடன் தேசிய ஒலிம்பிக் சங்கம் இம்முறையும் தேசிய ஒலிம்பிக் ஓட்டப் போட்டியை நடத்த தயாராகிவருகின்றது. அதனை மேலும் சிறப்பாக நடத்த இலங்கையின் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற ஜயசிங்க இணைவதோடு அண்மையில் எவரெஸ்ட் மலை ஏறியவர்களான ஜயந்தி குரு உதும்பலாவும், ஜோஹான் பிரிஸும் இணைந்து கொள்வது விசேட அம்சமாகும்.

இவர்களுடன் நுவரெலியா பிரதேச பாடசாலை மாணவர்கள் ஆயிரம் பேரும் ஒலிம்பிக் போட்டியில் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போட்டியில் பிரதம அதிதியாக ஓட்டத்தை ஆரம்பிக்கும் கொடியை மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க அசைக்கவுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபெறவுள்ள 800 மீற்றர் ஓட்ட வீராங்கனை கயந்திகா அபேரத்னவும் கலந்து கொள்ளவுள்ளார்.

இலங்கைக்குப் புகழை ஈட்டித்தந்த விளையாட்டு பிரபலங்கள் ஒலிம்பிக் ஓட்டப் போட்டியில் கலந்து கொள்வது பாடசாலை வீர, வீராங்கனைகளை ஊக்குவிப்பதாக அமையும். தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் சுப்பிரமணியம் இந்த வருடாந்த ஒலிம்பிக் ஓட்டப்போட்டியில் எவரெஸ்ட் மலையேறிய ஜயந்தி ஜோஹான் இணைந்து கொள்வது இளம் வீரர்களுக்கு நல்ல செய்தியை வழங்கியுளளது எனக் குறிப்பிடுகிறார்.

ஆசியாவின் கருப்பு குதிரை என வர்ணிக்கப்படும் 18 வருடங்களுக்கு முன் 2000ஆம் ஆண்டு சிட்னி நகரில் 22.28 விநாடிகளில் தூரத்தை ஓடி வெள்ளிப்பதக்கத்தை வென்ற சுசந்திகா ஜயசிங்க ஒலிம்பிக் தின ஓட்டப் போட்டியில் கலந்து கொள்வது மேலும் பெருமை சேர்க்கின்றது.

ஜயந்தி குரு உதும்பலா முதற் தடவையாக கடந்த வருடம் எவரெஸ்ட் மலையேறி படைத்த சாதனையை கடந்த மே 22ம் திகதி ஜொஹான் பீரிஸ் 8848 மீற்றரை ஏறி அவரும் சாதனை படைத்தார்.

ஜயந்தியுடன் கடந்த வருடம் மலை ஏறும் போது 423 மீற்றர்கள் இருக்கும் போது ஒட்சிசன் தாங்கியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரால் நிறைவு செய்ய முடியவில்லை. ஆனால் அவர் இம்முறை வெற்றி பெற்றார். முயற்சியில் இருந்தால் எதனையும் சாதிக்கலாம் என அவர் நிரூபித்துள்ளார்.

சுசந்திகா, ஜயந்தி, ஜொஹான் மட்டுமல்ல அண்மைக்காலமாக கயந்திகாவும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர்களை முன்மாதிரயாக கொள்ள வேண்டுமெனவும் கூறினார். எதிர்காலத்தில் நுவரெலியா பிரதேசத்தில் திறமையான சர்வதேசத்தை வெற்றிக்கொள்ளக் கூடியதாகவுள்ளதாகவும் உள்ளூர் ஒலிம்பிக்குழுத் தலைவர் தெரிவித்தார்.

ஒலிம்பிக் தின ஓட்டப் போட்டி எதிர்வரும் 25ம் திகதி காலை 10.00 மணிக்கு நுவரெலிய ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் ஆரம்பித்து சினேசிடா மைதானத்தில் முடிவடையவுள்ளது. மொத்தத் தூரம் 1.5 மீற்றராகும்.

இந்த ஒலிம்பிக் தின ஓட்டப் போட்டிகளுக்கு இணைந்ததாக பாடசாலை மாணவர்கள் 200 பேர் கலந்துகொள்ளும் சித்திரைப்போட்டியும் நடைபெறவுள்ளதோடு பங்குபற்று அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். ஒலிம்பிக் தின ஓட்டப் போட்டியில் கலந்து கொள்ளும் 50 பாடசாலைகளுக்கு புத்தகங்களும் வழங்கப்படும்.

ஒலிம்பிக் தின ஓட்டப் போட்டிக்கு முதல்நாள் 24ம் திகதி நுவரெலியா பிரதேச ஆசிரியர்களுக்கு தேசிய ஒலிம்பிக் குழு பாடநெறி பணிப்பாளர் வீ. எல். எச். பெரேராவின் தலைமையில் ஒலிம்பிக்கின் பெறுமதி குறித்து விசேட பயிற்சிப் பட்டறையொன்றும் நடைபெறவுள்ளது. அதன் பிரகாரம் 24, 25 ஆகிய இரு நிலைகளும் ஒலிம்பிக் பற்றிய அறிவை அனைவரும் பெற ஒலிம்பிக் குழு மீண்டும் நடவடிக்கை எடுத்திருப்பது விசேடமாகும்.

Ninaivil

திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019