வடகொரியா மீதான தடைகளை மீண்டும் புதுப்பித்து, அதிபர் டிரம்ப் உத்தரவு!

வட கொரியாவின் அணு ஆயுதங்களால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டின் மீதான தடைகளை புதுப்பித்து உத்தரவிட்டுள்ளார். 

வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக நீடித்துவந்த பகையின் காரணமாக வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியா மண்ணில் அமெரிக்க படைகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. 

மேலும் வடகொரியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தென்கொரியா மற்றும் அமெரிக்க படைகள் பல ஆண்டுகளாககூட்டு ராணுவ போர் பயிற்சிகளில் ஈடுபட்டும் வந்தன. இதற்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்து வந்தது. 

இந்நிலையில் தென்கொரியா மற்றும் அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா முன்வந்தது. அதை தொடர்ந்து கடந்த ஜூன் 12ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையே சிங்கப்பூரில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.அப்போது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவதாக அறிவித்தார். அதற்கு பதிலாக தென்கொரியாவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபடமாட்டோம் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இந்நிலையில் அதிபர் டிரம்ப் கூறியதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையேயான கூட்டு ராணுவ போர் பயிற்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த அறிவிப்பு வெளியாகி பத்தே நாட்கள் ஆன நிலையில், வட கொரியாவின் அணு ஆயுதங்களால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாக கருத்து தெரிவித்த, அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டின் மீதான தடைகளை புதுப்பித்து உத்தரவிட்டுள்ளார். 

கொரிய தீபகற்பத்தில் இருக்கும் அணு ஆயுதங்களாலும், வட கொரிய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் செயல்களாலும் அபாயம் இருப்பதாக கூறிய அதிபர் டிரம்ப், நேற்றுமுதல் தேசிய அவசர நிலையை நீட்டித்துள்ளார். 

இந்த நிலையில் அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனநாயக கட்சி, சிங்கப்பூர் உச்சிமாநாடு வெற்றி பெற்றதாக தற்பெருமையுடன் டிரம்ப் கூறியதற்கும், தற்போதைய நடவடிக்கைக்கும் அதிக முரண்பாடுகள் இருப்பதாக கூறியுள்ளது. 

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018