எத்தியோப்பியா பிரதமர் பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு

எத்தியோப்பியா பிரதமருக்கு ஆதரவாக மக்கள் நடத்திய பேரணியின் மீது இன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சிலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியா நாட்டின் பிரதமராக அபிய் அஹமத் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். இவரது ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து தலைநகர் அடிஸ் அபாபாவில் இன்று பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.

பேரணி முடிவில் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் அபிய் அஹமத், விடைபெற்று செல்ல ஆதரவாளர்களை நோக்கி கையை அசைத்தார். மக்களும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவரை வழியனுப்புவதற்காக கைகளை அசைத்து விடையளித்தனர்.

அப்போது, மக்கள் கூட்டத்துக்கிடையில் பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் பதற்றமடைந்த மக்கள் உயிர் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் காயங்களின்றி உயிர் தப்பிய பிரதமர் பின்னர் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசினார்.

இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்று குறிப்பிட்ட அவர், இதில் சிலர் பலியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, போலீஸ் வாகனத்தின் மீது சில மர்ம நபர்கள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் சிலர் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது. 

Ninaivil

திரு அரிபத்மநாதன் ராஜரத்தினம்
திரு அரிபத்மநாதன் ராஜரத்தினம்
நுவரெலியா
நெதர்லாந்து
22 யூலை 2018
Pub.Date: July 23, 2018
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018