அணியில் இடம் கிடைத்தும் தோனியால் வீணாப்போனது - பார்த்திவ் படேல் புலம்பல்

இந்திய கிரிக்கெட் அணியில் தோனியின் வருகைக்கு முன்னரே விக்கெட் கீப்பராக அணியில் இடம்பிடித்தவர் பார்த்திவ் படேல். ஆனால் தோனியின் வருகைக்கு பின்னர் பார்த்திவ் படேல், தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். 

தோனிக்கு முன் அறிமுகமான பார்த்திவ் :

இந்திய கிரிக்கெட் அணியில் தோனிக்கு முன் 18 வயதில் அறிமுகான வீரர் பார்த்திவ் படேல். இவர் 2003ல் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சவ்ரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற்றார். அப்போது இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணியில் ஒரு போட்டியில் கூட பார்த்திவ் படேலுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 

தோனி அறிமுகம் :

இந்நிலையில் 2004ல் விக்கெட் கீப்பர் பேட்ஸ் மேனாக அறிமுகமான தோனி அவரின் சிறப்பான பேட்டிங், அறிவான திறமையான விக்கெட் கீப்பிங் மூலம் அணியில் அசைக்க முடியாத நபராக இடம்பிடித்தார். 

புலம்பும் பார்த்திவ் படேல் :

இதுகுறித்து தற்போது பேசியுள்ள பார்த்திவ் படேல், “இந்திய அணியில் தோனிக்கு முன்னரே வாய்ப்பு கிடைத்தும் எங்களால் அணியில் நீடிக்க முடியவில்லை. இதற்கு தோனியை குறைசொல்வதற்கு ஒன்றும் இல்லை. எங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளின் போது அதை நிரூபிக்க தவறிவிட்டோம். அதனால் தோனி அதை பயன்படுத்தி அணியில் நிரந்தர இடம்பிடித்தார்.

அதன் பின்னர் 2007ல் அறிமுகமான டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக சாம்பியன் பட்டத்தை வெல்ல காரணமாக தோனி இருந்தார். பின்னர் 2011 உலகக் கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிரோபி, 2015ல் உலகக் கோப்பை அரையிறுதி வரை முன்னேறச் செய்து பல சாதனைகளை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் கேப்டனாக நிகழ்த்தி விட்டார்.

இதனால் இன்னும் நாங்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறோம்.” என தெரிவித்துள்ளார். பார்த்திவ் படேலுக்கு முன்னரே தினேஷ் கார்த்திக் வாய்ப்பு கிடைக்காதது குறித்து அண்மையில் புலம்பினார். 

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018