பார்படாஸ் டெஸ்ட் - இலங்கை அணி முதல் இன்னிங்சில் 154 ரன்களுக்கு சுருண்டது

வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிரா ஆனது.

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி பார்படாசில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முன்னணி ஆட்டக்காரர்கள் சொதப்பியதால் அந்த அணி 5 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. மழையால் ஆட்டம் சிறிது தடைபட்டது.

அதன்பின் ஜோடி சேர்ந்த ஷேன் டாவ்ரிச் மற்றும் கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஜோடி 115 ரன்கள் சேர்த்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி 200 ரன்களை கடந்தது. ஷேன் டாவ்ரிச் 71 ரன்னிலும், ஜேசன் ஹோல்டர் 74 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 69.3 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இலங்கை அணி சார்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டும். கசின் ரஜிதா 3 விக்கெட்டும், சுரங்கா லக்மல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. வெஸ்ட் இண்டீசின் சிறப்பான ப்ந்து வீச்சால் இலங்கை அணி திணறியது.அந்த அணியின் நிரோஷன் டிக்வெலா 42 ரன்களும், குணதிலகா 29 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இதனால் இலங்கை அணி 59 ஒவர்களில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டும், ஷனோன் காப்ரியல் 3 விக்கெட்டும், கீமர் ரோச் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. ஆனால் இலங்கை அணியினர் துல்லியமாக பந்து வீசி அசத்தினர்.

இதனால் முதலில் இருந்தே வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்டுகளை இழந்தது. 56 ரன்களை எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. கடைசி வரிசை பேட்ஸ்மேனான கீம்ர் ரோச் ஓரளவு தாக்குப்பிடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 28.4 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.

இத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 138 ரன்கள் கூடுதலாக பெற்றுள்ளது. எனவே இந்த டெஸ்டில் இலங்கை அணி எளிதில் வெற்றி பெறும் என தெரிகிறது. 

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018