'ஏர்செல் - மேக்சிஸ்' வழக்கு: சுப்பிரமணியன் சாமி மனு

ஏர்செல் - மேக்சிஸ்' வழக்கில், தன்னையும் ஒரு வாதியாக சேர்க்க கோரி, பா.ஜ., தலைவர், சுப்பிரமணியன் சாமி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை, இன்று(ஜூன் 26) நடக்க உள்ளது.

ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனங்களிடையிலான ஒப்பந்தத்தில், அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரிய ஒப்புதல் வழங்கியதில், விதிமீறல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதில், காங்கிரசை சேர்ந்த, முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி ஆகியோருக்கு, தொடர்பு இருப்பதாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கை, ஆறு மாதங்களுக்குள் முடிக்கும்படி, மார்ச், 12ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, இந்த வழக்கை விசாரித்து வரும், அமலாக்கத்துறை அதிகாரி, ராஜேஷ்வர் சிங், சரியான முறையில் விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ராஜேஷ்வர் சிங், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், ரஜ்னீஷ் கபுர் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

இந்நிலையில், இந்த வழக்கில், தன்னையும் ஒரு வாதியாக ஏற்க வேண்டும் எனக் கோரி, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, சுப்பிரமணியன் சாமி, மனுத் தாக்கல் செய்துள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.கே.மிஸ்ரா மற்றும் எஸ்.கே.கவுல் ஆகியார் அடங்கிய, விடுமுறை கால அமர்வு, சுப்பிரமணியன் சாமியின் மனு குறித்து, இன்று விசாரிக்க உள்ளது.

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018