ஹிட்லரே செய்யாததை கூட இந்திரா காந்தி செய்தார் - அருண் ஜெட்லி பரபரப்பு குற்றச்சாட்டு

நெருக்கடி நிலை காலத்தில், ஹிட்லரே செய்யாததை கூட இந்திரா காந்தி செய்தார் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். நேற்று அதன் 43-வது நினைவு தினம் ஆகும்.

நெருக்கடி நிலை காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சி பிரபலங்களில் தற்போதைய மத்திய மந்திரி அருண் ஜெட்லியும் ஒருவர். அவர் தனது அனுபவங்களை ‘பேஸ்புக்’ பக்கத்தில் 3 பகுதிகளாக கட்டுரை எழுதி வருகிறார். அதன் 2-வது பகுதியை நேற்று வெளியிட்டார். அதில் அவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை, ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டு இருந்தார். அவர் கூறி இருப்பதாவது:-

நெருக்கடி நிலை காலத்தில் நான் அம்பாலா சென்டிரல் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டேன். அப்போதைய சிறை விதிகளின்படி, கைதி ஒருவருக்கு தினப்படி பட்ஜெட்டில் ஒதுக்கீட்டு தொகை ரூ.3 மட்டுமே. இதில்தான் உணவு உள்ளிட்டவைகளை நிர்வகிக்க வேண்டும்.

1933-ம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி படைகள் அத்துமீறலை முன்மாதிரியாக கொண்டுதான் 1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை கொண்டுவரப்பட்டதோ என்று தோன்றுகிறது. ஹிட்லரும், இந்திரா காந்தியும் அரசியல் சட்டத்தை ரத்து செய்யவில்லை. மாறாக, குடியரசு அரசியல் சட்டத்தை பயன்படுத்தி, ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்றினர். இந்திரா காந்தி ஒருபடி மேலே சென்று, இந்தியாவை பரம்பரை ஜனநாயகமாக மாற்றினார்.

ஹிட்லர், தனது செயல்கள் அரசியல் சட்டத்தின் 4 மூலைகளுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொண்டார். அதேபோல், இந்திராவும் அரசியல் சட்டப்பிரிவு 352-ன் கீழ், நெருக்கடி நிலை பிரகடனம் செய்தார். இதில் அடிப்படை உரிமைகளுக்கான 359-ம் பிரிவை முடக்கி, செயலிழக்க செய்தார். ஹிட்லரும், அவரது நாட்டு அரசியல் சட்டத்தின் 48-வது பிரிவை சுட்டிக் காட்டி, ‘மக்களை பாதுகாப்பது’ என்ற பெயரில் சர்வாதிகார செயல்களை நியாயப்படுத்தினார்.

ஹிட்லர், எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்தது போலவே, இந்திரா காந்தியும், எதிர்க்கட்சி எம்.பி.க்களை கைது செய்து, நாடாளுமன்றத்தில் செயற்கையாக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை உருவாக்கினார். அதை வைத்து அருவறுப்பான அரசியல் சட்ட திருத்த மசோதாக்களை நிறைவேற்றினார். இதில், 42-வது சட்டத்திருத்தம், ஐகோர்ட்டுகளின் அதிகாரங்களை நீர்த்துப்போக செய்வதாகும்.

அரசியல் சட்டப்பிரிவு 368-ஐ திருத்தி மாற்றியதன் மூலம், அரசியல் சட்ட திருத்தத்தை நீதிமன்ற பார்வைக்கு அப்பாற்பட்டதாக ஆக்கினார். ஹிட்லர் செய்யாத சில விஷயங்களை கூட இந்திரா காந்தி செய்தார். அரசமைப்பு சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவற்றை திருத்தினார். நாடாளுமன்ற நிகழ்வுகளை பொதுமக்களுக்கு சென்றடையாவண்ணம் ஊடகங்கள் அதைப்பற்றி எழுத தடை விதித்தார். இதை ஹிட்லர் கூட செய்யவில்லை.

ஹிட்லரின் சர்வாதிகாரத்தை ‘புரட்சிகரமானது’ என்று எப்படி கோயபல்ஸ் பேசினாரோ, அதேபோல், காங்கிரசாரும் இந்திரா காந்தியின் செயல்பாடுகளை ‘புரட்சி’ என்று பேச வைக்கப்பட்டனர்.

இந்திராவும், ஹிட்லரும் செயல்படுத்திய ஊடக தணிக்கை முறை கிட்டத்தட்ட ஒரேமாதிரியானதுதான். ‘ஜெர்மனியில் ஒரே அதிகாரம்தான் உள்ளது, அது ஹிட்லர்’ என்று ஒரு நாஜி தலைவர் கூறினார். அதேபோல், ‘இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா’ என்று காங்கிரஸ் தலைவர் தேவகந்தா பரூவா கூறினார்.

ஹிட்லர் 25 அம்ச பொருளாதார திட்டத்தை அறிவித்தார். ஆனால், இந்திரா காந்தி 20 அம்ச திட்டம்தான் அறிவித்தார். அந்த பற்றாக்குறையை நிரப்ப, சஞ்சய் காந்தி 5 அம்ச பொருளாதார, சமூக திட்டத்தை அறிவித்தார். இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

அருண் ஜெட்லியின் இந்த பதிவை, பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018