மெக்சிகோ ரசிகர்கள் 16 பேர் சுட்டுக்கொலை

உலக கிண்ண கால்பந்து போட்டியில் தென்கொரியாவை வீழ்த்திய மகிழ்ச்சியை கொண்டாடிக்கொண்டிருந்த  மெக்சிகோ ரசிகர்கள் மீது மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியின்போது, தென்கொரிய அணியை 2-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணி வெற்றிக்கொண்டது.. இப் போட்டியில் பெற்ற வெற்றியை மெக்சிகோ நாட்டில் ரசிகர்கள் பலர் வீதிகளில் கொண்டாடியுள்ளனர்.அதே நேரத்தில் டெக்சாஸ்  எல்லை பகுதியில் உள்ள ஒரு கார் திருத்துமிடத்தில் 6 பேர் கால்பந்தாட்ட போட்டியை பார்த்து கொண்டிருந்தனர். அதன்போது திடீரென காரில் துப்பாக்கிகளுடன் வந்திறங்கிய மர்ம நபர்கள், 6 பேர் மீது சரமாரியாக துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதற்கிடையில், மற்றொரு பகுதியில் கடை ஒன்றில் போட்டியை கண்டுகளித்த கடையின் உரிமையாளர்கள் இருவர் மற்றும் வாடிக்கையாளர்கள் 3 பேர் என, 5 ரசிகர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸாருக்கு தகவல் வந்துள்ளது. 

அதன்பின் நள்ளிரவில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளது. மெக்சிகோ அணி வெற்றி பெற்ற 24 மணி நேரத்தில் இடம்பெற்ற 16 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பொலிஸார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரசிகர்கள் கொலை குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டது இரண்டு நபர்கள் மட்டுமே என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018