உலகக் கோப்பைய ஜெயிக்காம நான் ஓய்வு பெற மாட்டேன்: மெஸ்ஸி

உலகின் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழும் மெஸ்ஸி, உலகக்கோப்பையை வெல்லாமல் ஓய்வுப் பெறப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். 

சென்ற உலகக்கோப்பையில், இறுதிப் போட்டி வரை சென்ற அர்ஜென்டினா அணி ஜெர்மனி அணியிடம் தோல்வியடைந்து, கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இதனால், உலகின் முன்னணி வீரர்களில் ஒருவராக கருதப்படும் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். இதையடுத்து, அவரது ரசிகர்கள் அனைவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாட ஒப்புக்கொண்டார். 

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டிகளில் அர்ஜென்டினா அணி இரண்டு போட்டிகளில் ஒன்றில் தோல்வியும், ஒன்றில் டிராவும் அடைந்து மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

அதிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெஸ்ஸி இதுவரை ஒரு கோல் கூட அடிக்காமல் மிகவும் மோசமாக ஆடி வருவது அந்த அணி ரசிகர்களுகுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இன்று நடைபெறும் போட்டியில் அர்ஜென்டினா அணி நைஜீரியா அணியை எதிர்கொள்கிறது.

இதில், வெற்றி பெறும் அணி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், அர்ஜென்டினா ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலோடு இந்தப் போட்டியை எதிர்நோக்கியுள்ளனர். இதனிடையே, இந்த உலகக்கோப்பைத் தொடருடன் மெஸ்ஸி ஓய்வு பெறுவார் என்றும் பலரும் கூறி நிலையில், மெஸ்ஸி அதை மறுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “உலகக்கோப்பை வெல்வது என்பது என்னை உட்பட, எல்லா அர்ஜென்டினா மக்களுக்கும் ஒரு கனவு. உலக அளவில் பல்வேறு கோப்பைகளை வென்றிருந்தாலும், உலகக்கோப்பையை வெல்லும் உணர்வை அனுபவிக்க வேண்டும் என்பது எனது கனவாகும். அர்ஜென்டினா அணிக்காக உலகக்கோப்பையை வெல்லாமல் நான் ஓய்வு பெற மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த அறிவிப்பால், ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். ஒருவேளை இந்த உலகக்கோப்பையை அர்ஜென்டினா வெல்லாவிட்டாலும், 2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடக்கும் உலகக்கோப்பையில் கட்டாயம் பங்கேற்பார் என்று நம்பிக்கை வைத்துள்ளனர்.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018