அரசு அதிகாரிகளுடன் கவர்னர் கலந்துரையாடுவது தவறு இல்லை - முன்னாள் அட்வகேட் ஜெனரல் விளக்கம்

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாவட்ட வாரியாக ஆய்வு பயணம் செய்வதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவருகிறது. நாமக்கல் மாவட்ட போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதை கண்டித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டனர்.

‘கவர்னருக்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடும் அதிகாரம் உள்ளது, கவர்னரை பணி செய்யவிடாமல் தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்’ என்று கவர்னர் மாளிகையும், ‘கவர்னருக்கு ஆய்வு செய்ய அதிகாரம் இல்லை, போராட்டம் தொடரும்’ என்று தி.மு.க.வும் அறிவித்தன.

இந்நிலையில் கவர்னர் மாளிகை நேற்று மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோவை மாவட்டத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தியது குறித்து விமர்சனம் செய்யப்பட்டதும், இதுகுறித்து மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சட்ட நிபுணரான முன்னாள் அட்வகேட் ஜெனரலும், அகில இந்திய அளவிலான மூத்த வக்கீலுமான ஸ்ரீஹரி அனேய் என்பவரிடம் கருத்துகேட்டு கவர்னர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டது.

அதற்கு முன்னாள் அட்வகேட் ஜெனரல் ஸ்ரீஹரி அனேய் அளித்த விளக்கம் வருமாறு:-

அரசியல் சட்டத்தை அமல்படுத்தியபோது, கவர்னரை தேர்தல் நடத்தி தேர்ந்தெடுப்பதா? நியமிப்பதா? என்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேரு, ‘கவர்னரை நியமிப்பதன் மூலம் மாநில அரசோடு மத்திய அரசுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்படும்.

தேர்தல் மூலம் நியமித்தால் அங்கு பிரித்தாளும் நிலை வரும். அதனால் கவர்னரை ஒரு அரசியல் கட்சியில் இருந்து தேர்வு செய்து நியமிப்பதன் மூலம் சட்டசபைக்கும், நிர்வாக துறைக்கும் நல்ல சரிசமமான தொடர்பு இருக்கும்’ என்று கூறினார். இதனை அரசியலமைப்பு குழு தலைவர் அம்பேத்கரும் ஏற்றுக்கொண்டார்.

அரசியல் சாசனத்தில் கவர்னருக்கும், அவருடைய பதவிக்கும் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மாநில அமைச்சரவைக்கு கவர்னர் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்.

தமிழகத்தில் இதற்கு முன்பு கவர்னராக இருந்தவர்கள், மாவட்ட நிர்வாகத்தோடு நேரடியாக கலந்துரையாடலில் ஈடுபட்டது இல்லை. அதனால் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் செய்தது தவறு என்றும், விதிமுறை மீறல் என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.

ஆனால் அசாம் மாநில கவர்னர் மாவட்ட நிர்வாகத்துடன் நேரடியாக கூட்டத்தை இதற்கு முன்பு நடத்தியிருக்கிறார். அதுபோல தமிழக கவர்னரும் கலந்துரையாடல் நடத்தியிருக்கிறார்.

அதனால் இது தவறு என்றோ, விதிமீறல் என்றோ, சட்டவிரோதம் என்றோ கூறமுடியாது. ஏற்கனவே தமிழகத்தில் இதற்கு முன்பு கவர்னராக இருந்தவர்கள் இதேபோல மாவட்ட நிர்வாகத்தோடு நேரடியாக கலந்துரையாடல் கூட்டம் நடத்தவில்லை என்பதால் தமிழக கவர்னர் செய்தது தவறு என்று சொல்லமுடியாது.

அரசியலமைப்பு சாசனத்தில் கவர்னருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி அவர் செயல்பட்டுள்ளார். எனவே கோவை மாவட்ட நிர்வாகத்தோடு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேரடியாக கலந்துரையாடல் கூட்டம் நடத்தியது தவறு என்று கூறமுடியாது.

இவ்வாறு அவர் கருத்து தெரிவித்திருப்பதாக கவர்னர் மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018