ராமேசுவரத்தில் சிக்கிய வெடிபொருட்கள் பாலங்களை தகர்க்கும் சக்தி வாய்ந்தவை - நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணி யார்புரம் கடற்கரை பகுதியில் மீனவர் எடிசன் வீடு உள்ளது. இவரது வீட்டு தோட்டத்தில் செப்டிக் டேங்க் அமைப்பதற்காக தோண்டும் பணி நடந்தது.

அப்போது இரும்பு பெட்டி சிக்கியது. தொடர்ந்து தோண்டியதில் பெட்டி, பெட்டியாக ஏராளமான வெடிபொருட்கள் கண்டு எடுக்கப்பட்டன.

எந்திர துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள், டெட்டனேட்டர் ஸ்லாப், கையெறி குண்டுகள், கண்ணிவெடிகள், ராக்கெட் லாஞ்சர் குண்டில் பொருத்தப்படும் கருவி, டெட்டனேட்டர் வெடிப்பதற்கு பயன்படுத்தப்படும் இணைப்பு வயர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் தண்ணீர் புகாத அளவுக்கு பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றிய நிலையில் இருந்தன.

கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை போலீசார் பாதுகாப்பாக எடுத்து தரம் பிரித்து வைத்தனர்.

இதில் தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகள் ராமநாதபுரம் ஆயுதப்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்ற வெடிபொருட்கள் அனைத்தும் அந்த இடத்திலேயே மணலுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தமிழீழ ஆதரவு இயக்கத்திற்கு சொந்தமானது என்பது உறுதியாகி உள்ளது.

இந்த வெடிபொருட்களை மதுரை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

பின்னர் குணசேகரன் கூறுகையில், ராமேசுவரத்தில் சிக்கிய ஆயுதப்புதையலில் ராணுவத்தில் உள்ள எல்லா வெடிமருந்துகளும் இருந்தன. இதுவரை பார்க்காத 13 வகையான வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 1970-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டவை.

இந்த வெடிபொருட்கள் போரின் போது பாலங்கள், கட்டிடங்களை தகர்க்க பயன்படுத்தக் கூடியவையாகும். 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஒரே நேரத்தில் சேதப்படுத்தி கவிழ்க்க இந்த வகை குண்டுகள் பயன்படும்.

டெட்டனேட்டர்கள் இணைத்து வைக்கப்பட்டு இருந்தால் அவை உராய்ந்து வெடித்திருக்கும். அப்படி நடந்திருந்தால் ஒரு ஊரே காலியாகி இருக்கும். நல்ல வேளையாக அவை ஒன்றாக வைக்கப்படவில்லை.

கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை பாதுகாக்க வசதி இல்லை. ஓரிரு நாளில் அவற்றை செயல் இழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தங்கச்சிமடத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் வெடிபொருட்கள் அபாயகரமானது என்பதால் இவற்றை அழிப்பதற்கு அனுமதி கேட்டு திருவாடானை கோர்ட்டில் போலீசார் மனு கொடுத்துள்ளனர்.

மாஜிஸ்திரேட்டு இன்று நேரில் ஆய்வு செய்து அனுமதி அளித்த பின்னர் வெடிகுண்டு பிரிவு போலீசாரால் இவை அழிக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா தகவல் தெரிவித்துள்ளார். 


Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018