ஆளுநர் விஷயத்தில் தமிழக மக்களை ஏமாற்றுகிறது எடப்பாடி அரசு- காங். குற்றச்சாட்டு

தமிழக ஆளுநரின் ஆய்வுப் பணிகள் குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் விளக்கம் அளிக்காததால் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். பின்னர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபையில் இன்று நேரமில்லா நேரத்தில் ஆளுநரின் சுற்றுப்பயணம் பற்றி முழு விவரத்தை முதலமைச்சர் வாயிலாக தெரிந்துகொள்ள நாங்கள் விரும்பினோம். 

ஆளுநர் அலுவலக செய்தியின்படி, முதன்மைச் செயலாளரிடம் எல்லாதவிதமான தகவல்களையும் சொல்லிவிட்டுதான் ஆளுநர் சுற்றுப்பயணம் செய்வதாக சொல்லியிருக்கிறார். இது முதலமைச்சருக்கு தெரியுமா? என்று கேட்பதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் வெளிநடப்பு செய்தோம். 

தமிழகத்தில் அரசு செயல்படுகிறதா? அல்லது ஆளுநர் செயல்படுகிறாரா? என்பது தெரியவில்லை. ஆளுநரின் சுற்றுப்பயணத்திற்கு இந்த அரசு அனுமதி கொடுக்கிறது என்றால் தமிழக மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்றுதான் பொருள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Ninaivil

திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019