கோல் கீப்பர் இல்லாமல் ஆடிய ஜெர்மனி - அடித்து துரத்தப்பட்ட சோகம்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில் ஜெர்மனி படுதோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. 

21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன. இந்த தொடரின் போட்டிகள், ரஷ்யாவின் பல முக்கிய நகரங்களில் பிரமாண்ட மைதானங்களில் நடைப்பெற்று வருகின்றன. 

நேற்று ‘எஃப்’ பிரிவில் இடம்பெற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணி கட்டாயம் வெற்றியை நோக்கி தென் கொரியாவை எதிர்கொண்டது. 

கொரியா அசத்தல் :

போட்டியின் முதல் பாதி 0-0 என எந்த அணியும் கோல் போடாமல் இருந்தது. இந்நிலையில் போட்டியில் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

அதில் 90+2’ வது நிமிடத்தில் கொரியா அணியின் கிம் யாங்-கொவ்ன் கோல் அடித்தது அசத்தினார். 

கோல் கீப்பர் இல்லாத ஜெர்மனி :

இதையடுத்து போட்டியை வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது என்ற நிலையில், ஜெர்மனியின் கோல் கீப்பரும் மற்ற வீரர்களைப் போல களத்தில் இறங்கி விளையாடினார். 

இந்நிலையில் கொரியா பக்கம் பந்தை கடத்தி சென்ற ஜெர்மனி வீரர்கள், களத்தில் இருந்த கீப்பர் மானுவல் நியூவரிம் பந்தை பாஸ் செய்தனர். 

சற்று தடுமாறிய மானுவலிடமிருந்து, தென் கொரிய வீரர் லாபகமாக பந்தை தன் வசப்படுத்தி, ஜெர்மனி கோல் பக்கம் இருந்த தென் கொரிய வீரர் சன் ஹியூங்-மின்னிடம் லாங் பாஸ் செயதார். 

அதை லாபகமாக தடுத்த சன், கோல் அடித்து ஜெர்மனிக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்தார். தோல்வியை தவிர்க்கவும், வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயமும் ஜெர்மனி அணி கீப்பரும் சாதாரண வீரராக கூடுதல் பலம் சேர்க்கும் அபாயகரமான இந்த முடிவை எடுத்தது. இதை சாதகமாக பயன்படுத்திய கொரியா கோல் அடித்து அசத்தினர். மேலும் ஜெர்மனியின் 80 ஆண்டுக்கு பின்னர் லீக் சுற்றோடு வெளியேறியது. 1938ம் ஆண்டு இதே போல் லீக் சுற்றுடன் வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடரும் சோகம் : 

தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் நடப்பு சாம்பியன் அணி லீக் சுற்றிலேயே வெளியேறுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியிலும் அப்போதைய நடப்பு சாம்பியனாக இருந்த ஸ்பெயின் அணி லீக் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டது.

அதற்கு முந்தைய 2014 உலகக் கோப்பையிலும் இதே போல இத்தாலி அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது.

Ninaivil

திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019