ஜனாதிபதிக்கு அவமரியாதை; கலெக்டர் விசாரணை

ஒடிசா மாநிலம், புரி மாவட்டத்தில் உள்ள ஜகன்னாதர் கோவிலில், கடந்த மார்ச்சில், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவிக்கு அவமரியாதை நேர்ந்ததாக கூறப்படுவது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் விசாரணையை துவக்கி உள்ளது.

ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, ஜகன்னாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, மார்ச், 18ல், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்தும், அவரது மனைவி, சவீதாவும் சென்றனர். கோவில் கருவறை அருகே, ராம்நாத் கோவிந்தும், சவீதாவும் சென்றபோது, அங்கு பாதுகாவல் பணியில் இருந்த ஊழியர் கள், அவர்களை தடுத்து நிறுத்தினர். சவீதாவை, கோவில் பாதுகாவலர்கள் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.

கோவில் பாதுகாவலர்களின் முரட்டுத்தனமான நடவடிக்கை குறித்து, புரி மாவட்ட கலெக்டர், அரவிந்த் அகர்வாலுக்கு, ஜனாதிபதி மாளிகை, மார்ச், 19ல், புகார் கடிதம் எழுதியது. இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு பின், இந்த விவகாரம் தொடர்பாக, கலெக்டர் நேற்று விசாரணையை துவக்கி உள்ளார். ஜனாதிபதியிடம் அவமரியாதையாக நடந்ததாக, மூன்று பாதுகாவலர்களிடம், விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அளிக்கவும், கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மஹாத்மா காந்திக்கும் தடை!

புரி ஜகன்னாதர் கோவிலில், மஹாத்மா காந்தி, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா உள்ளிட்டோர், பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 

ஜகன்னாதர் கோவிலில், 'ஹிந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்' என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

1984ல், அப்போதைய பிரதமர் இந்திரா, இந்த கோவிலுக்கு சென்றபோது, பார்சி இனத்தை சேர்ந்தவரின் மனைவி என்பதால், அனுமதி மறுக்கப்பட்டது. மஹாத்மா காந்தி, முஸ்லிம்கள், தலித்துகளுடன், ஜகன்னாதர் கோவிலுக்குள், ஒருமுறை நுழைய முற்பட்டபோது, அவரை, பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018