பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடா இந்தியா? : அரசு மறுப்பு

தாமஸ் ரியூடர்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், பெண்களுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய நாடு இந்தியா. சிராயவை விடவும் இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு என கூறப்பட்டிருந்தது.

எந்த புள்ளிவிபரமும் இல்லாமல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு அறிக்கையை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்த கருத்து கணிப்பும் நடத்தப்படாமல், புள்ளி விபரமும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கை இந்தியா மீது தீய எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெளியிடப்பட்டது என்பது தெளிவாகிறது. பெண்களுக்கான உரிமைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

15 முதல் 19 வயதிலான பெண்கள் தாய்மை அடைவது 2015 - 16 ம் ஆண்டிலேயே 7.9 சதவீதமாக குறைக்கப்பட்டு விட்டது. தேசிய குற்ற புள்ளி விபரத்தின் அடிப்படையில், 2016 ம் ஆண்டு 38,947 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போலீஸ் அதிகாரிகள் பெண்களுக்கு ஆதரவாக, அவர்களுக்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி தர செயல்படுவதையே காட்டுகிறது.

பாலியல் பலாத்கார குற்றங்கள் அடிப்படையில், இந்தியாவில் 1000 பேருக்கு 0.03 சதவீதம் தான் உள்ளது. ஆனால் அமெரிக்காவில் 1.2 சதவீதம் பலாத்காரங்கள் நடக்கின்றன. பெண்களுக்கான திருமண வயது அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018