பவன் கல்யான் மனைவிக்கு கொலை மிரட்டல் : அடக்கி வைக்ககூடாதா என பலர் வேண்டுகோள்..!

பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய்க்கு, பவன் கல்யாண் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து நடிகை ரேணு தேசாய் ட்விட்டரில் இருந்து வெளியேறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய்க்கும், தொழில் அதிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நிச்சயதார்த்த புகைப்படங்களை ரேணு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அதை பார்த்த பவன் கல்யாண் ரசிகர்கள் அவரை மிரட்டினார்கள்.

”ஏன் உங்களால் தனியாக வாழ முடியாதா, எத்தனை பெண்கள் சிங்கிளாக உள்ளனர். இரண்டாவது திருமணம் செய்தால் கொன்றுவிடுவோம்” என்று பவன் கல்யாண் ரசிகர்கள் ரேணு தேசாயை மிரட்டியுள்ளனர்.

பவன் கல்யாண் ரசிகர்கள் அசிங்கமாக திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததை பார்த்த ரேணு தேசாய் ட்விட்டரில் இருந்து வெளியேறியுள்ளார். நெகட்டிவிட்டி வேண்டாம் என்று ட்விட்டரில் இருந்து வெளியேறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ”வாழ்க்கையில் புது அத்தியாயத்தை துவங்கும் நான், நெகட்டிவிட்டியில் இருந்து தள்ளியிருக்க ட்விட்டரில் இருந்து வெளியேறுகிறேன். வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார் ரேணு தேசாய்.

ஆனால், ரசிகர்கள் மிரட்டல் விடுத்துள்ள நிலையிலும், பவன் கல்யாணோ ரேணு சேசாய்க்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட்டியுள்ளார்.

”நீங்கள் வாழ்த்துகிறீர்கள் ஆனால் உங்களின் ரசிகர்களோ ரேணுவை மிரட்டுகிறார்கள். அவர்களை கொஞ்சம் அடக்கி வைக்கக் கூடாதா..?” என்று பலரும் பவன் கல்யாணிடம் சமூக வலைத்தளங்கள் மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018