சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தைக் கண்டித்து அமமுக சார்பில் கண்டனப் போராட்டம்

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஜூலை 6 மற்றும் 9ம் தேதிகளில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் - சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஆனால், இதனை விவசாயிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். சில இடங்களில் விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போராட்டம் நடத்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், சேலம் - சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்க்கும் பொதுமக்களை கைது நடவடிக்கை மூலம் அச்சுறுத்தியும், இழப்பீடு என்பதை வலுக்கட்டாயமாக திணித்து வருகிறது.

எப்படியாவது மத்திய அரசின் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை முன்னெடுக்கும் இந்த மக்கள் விரோத எடப்பாடி பழனிசாமி அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து, இந்த துரோக ஆட்சிக்கு மக்கள் சக்தியின் வலிமையையும், உணர்வையும் எடுத்துரைக்க வேண்டி இருக்கிறது.

விளை நிலங்களையும் விவசாயத்தையும் காத்திட வருகிற ஜூலை 6ம் தேதி திருவண்ணாமலையிலும், 9ம் தேதி தருமபுரி மாவட்டம், அரூரிலும் மாலை 5 மணியளவில் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்ஏ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018