மைலோ அனுசரணையில் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான அஞ்சலோட்டம்

கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை பிரிவு மற்றும் ஊவா மாகாண கல்வி அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டில் பதுளை வின்சன்ட் டயஸ் மைதானத்தில் (26) நிறைவுக்குவந்த அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான வயதுப் பிரிவு அஞ்சலோட்டப் போட்டிகளின் ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி அணியும், பெண்கள் பிரிவில் வலள ஏ. ரத்னாயக்க கல்லூரி அணியும் பெற்றுக்கொண்டன.

ஆண்கள் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரி அணி இரண்டாவது இடத்தையும், நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரி அணி மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.

அதேபோன்று, பெண்கள் பிரிவில் குருநாகல் புனித ஜோன் கொத்தலாவல வித்தியாலயமும், மாஉஸ்வௌ ஸ்ரீ ரதனபால மகா வித்தியாலயமும் முறையே 2ஆவது, 3ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டன.

12, 14, 16, 18 மற்றும் 20 வயதுக்குப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலாருக்கும் 38 பிரிவுகளுக்காக கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற இம்முறை அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான அஞ்சலோட்டப் போட்டியில் நாடளாவிய ரீதியில் இருந்து சுமார் 7500 இற்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதில் 33 புதிய போட்டி சாதனைகள் மாணவர்களால் முறியடிக்கட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், போட்டிளின் முதல் இரண்டு நாட்களில் 13 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. இதன்படி, போட்டிகளின் முதல் நாளன்று ஐந்து புதிய சாதனைகளும், இரண்டாம் நாளன்று எட்டு புதிய சாதனைகளும் நிலைநாட்டப்பட்டன.

இதில் ஆறு சாதனைகளை வலள ஏ. ரத்னாயக்க கல்லூரி அணி நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் ஜப்பானில் அண்மையில் நிறைவுக்கு வந்த ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தனிநபர் போட்டிகளில் (400, 800 மீற்றர்) வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுகொடுத்த டிலிஷி ஷியாமலி குமாரசிங்க தலைமையிலான வலள ஏ. ரத்னாயக்க கல்லூரி 18, 20 ஆகிய வயதுப் பிரிவுகளில் இரு பாலாருக்குமான 4X800 மீற்றர் அஞ்சலோட்டத்தில் புதிய சாதனைகளுடன் தங்கப் பதக்கங்களை வென்றன.

அத்துடன், 2016ஆம் ஆண்டு முதல் பெண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொண்டு வருகின்ற வலள ஏ. ரத்னாயக்க கல்லூரி அணி, இம்முறை போட்டித் தொடரில் கலவன் பாடசாலை அணிக்கான சம்பியன் பட்டத்தையும் வென்றது. இந்நிலையில், போட்டிகளின் இறுதி நாளான நேற்று (26) நடைபெற்ற 100 மீற்றர், 200 மீற்றர், 300 மீற்றர் மற்றும் 400 மீற்றர் உள்ளிட்ட நான்கு வகையான தூரங்களைக் கொண்டதாக அமந்த கலவன் அஞ்சலோட்டப் போட்டிகளில் எட்டு புதிய சாதனைகளும் நிலைநாட்டப்பட்டன.


சம்பியன் பட்டங்களை வென்ற பாடசாலைகள் 12 வயதுக்குட்பட்ட பிரிவு


ஆண்கள் – கொழும்பு றோயல் கல்லூரி


பெண்கள் – கொழும்பு மியூசியஸ் மற்றும் பன்னிப்பிட்டிய தர்மபலா வித்தியாலயம் (இணை சம்பியன்கள்)


14 வயதுக்குட்பட்ட பிரிவு


ஆண்கள் – கொழும்பு றோயல் கல்லூரி பெண்கள் – கொட்டஞ்சேனை கன்னியாஸ்திரிகள் மடம்


16 வயதுக்குட்பட்ட பிரிவு


ஆண்கள் – பல்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி பெண்கள் – வலள ஏ. ரத்னாயக்க கல்லூரி


18 வயதுக்குட்பட்ட பிரிவு


ஆண்கள் – பல்பலப்பிட்டி


புனித பேதுரு கல்லூரி


பெண்கள் – குருநாகல் ஸ்ரீ ஜோன் கொதலாவல கல்லூரி


20 வயதுக்குட்பட்ட பிரிவு


ஆண்கள் – பல்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி


பெண்கள் – வலல்ல ஏ. ரத்னாயக்க கல்லூரி.

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018