பாலைவனத்தில் ஓர் பசுமை புரட்சி!

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் கேட்டரிங் நிறுவனம் புதிய தொழிற்நுட்பத்தில் காய்கறி விவசாயம்.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனமும் அமெரிக்காவின் கிராப் ஒன் (Crop One) நிறுவனமும் இணைந்து சுமார் 40 மில்லியன் டாலர் செலவில் உலகின் மிகப்பெரிய செங்குத்து அடுக்கு விவசாய பண்ணை (Vertical Farming) ஒன்றை துபாய் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் அருகே அமைக்க திட்டம்மிட்டுள்ளது .

இந்தப் பண்ணை 130,000 சதுரடி பரப்பளவில் அமையவுள்ளது என்றாலும் இங்கு விளையும் காய்கறிகள் 900 ஏக்கர் பரப்பளவில் விளையும் காய்கறிகளுக்கு ஈடான விளைச்சலை தரும்.

இங்கு விளையும் கீரை மற்றும் காய்கறிகளை ஒரே நேரத்தில் 2,700 கிலோ அளவிற்கு அறுவடை செய்யப்படும். இந்த செங்குத்துப் பண்ணைகள் பூச்சி கொல்லி மற்றும் களைகள் இன்றி காணப்படுவதுடன் தினமும் பிரஷ்ஷான காய்கறிகளை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் கேட்டரிங் நிறுவனத்திற்கு வழங்கும்.

மேலும் இந்த செங்குத்து தொழிற்நுட்பத்தில் விளையும் பயிர்களுக்கு வெளியிடங்களில் பயன்படுத்தும் தண்ணீரின் அளவிலிருந்து சுமார் 1 சதவிகிதம் மட்டுமே தேவவைப்படும் அதாவது 99 சதவிகித தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.

இந்த செங்குத்து பண்ணைக்கான கட்டுமானத் திட்டம் எதிர்வரும் 2018 நவம்பர் மாதம் துவங்கி 1 வருட காலத்திற்குள் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019 டிசம்பர் மாதத்தில் தனது முதலாவது அறுவடையை எமிரேட்ஸ் கேட்டரிங் நிறுவனத்திற்கு வழங்கும் என்றும் இதன் மூலம் எமிரேட்ஸ் கேட்டரிங் நிறுவனத்திடமிருந்து உணவைப் பெறும் சுமார் 105 சர்வதேச விமான நிறுவனங்களும், 25 விமான நிலைய லவுஞ்சுகளும் பிரஷ்ஷான உணவை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018