நகைச்சுவை இல்லாத திகில் படம் பேய் வேடத்தில் நடிக்கிறார், அஞ்சலி

நகைச்சுவையுடன் கூடிய பேய் படங்களை பார்த்து ரசிகர்கள் சோர்ந்து விட்ட நிலையில், `ஓ' என்ற பெயரில் ஒரு திகில் படம் தயாராகிறது.

இதில், கதாநாயகன் கிடையாது. கதாநாயகியை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். பிரவீன் பிக் காட் டைரக்டு செய்ய, அஜய் பணிக்கர் தயாரிக்கிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது:-

``எங்கள் நிறுவனத்தின் இரண்டாவது படம், இது. 50-க்கும் மேற்பட்ட கதைகளை கேட்டு, இறுதியாக இந்த கதையை தேர்ந்தெடுத்தோம். ஒரு திகில் படத்துக்கான அத்தனை அம்சங்களும் இதில் இருப்பதாக உணர்ந்தோம். நகைச்சுவை இல்லாத திகில் படமாக இது தயாராகிறது.

இந்த படத்தின் கதை சம்பவங்கள், எல்லோருடைய வாழ்க்கையிலும் நடந்திருக்கும். டைரக்டர் பிரவீன் கதை சொல்லும்போது, படம் பார்க்கிற அனுபவம் ஏற்பட்டது. படத்தில், மெய்சிலிர்க்கும் விஷயங்கள் நிறைய உள்ளன.

படத்தின் கதாநாயகி அஞ்சலி பேய் வேடத்தில் நடிக்கிறார். அவருடைய அர்ப்பணிப்பும், அழகிய தோற்றமும், பக்கத்து வீட்டுப்பெண் போன்ற கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தும்.

படத்துக்கு பின்னணி இசை வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அரோல் கரோலியை ஒப்பந்தம் செய்தோம். படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. மூன்றுமே திரைக்கதையோடு இணைந்த பாடல்கள்.'' 

Ninaivil

திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
16 யூலை 2018
Pub.Date: July 18, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018