கோலமாவு கோகிலா படத்தின் சென்சார் வெளியீடு

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. நயன்தாரா நடிப்பில் `இமைக்கா நொடிகள்' விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், அடுத்ததாக ‘கோலமாவு கோகிலா’ படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட தணிக்கைக் குழு சோதனைக்கு அனுப்பப்பட்ட இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து `எதுவரையோ', கல்யாண வயசு என இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

நயன்தாரா தற்போது `கொலையுதிர் காலம்', அஜித்துடன் விஸ்வாசம், சிரஞ்சீவியுடன் சயீரா நரசிம்ம ரெட்டி, நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார். விரைவில் அறிவழகன் இயக்கத்திலும், சர்ஜுன் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.

Ninaivil

திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019