Episode 12: முட்டாள் ஆக்கப்படும் செண்ட்ராயன்; வெளியேறத் தயாராகும் அனந்த் வைத்தியநாதன்!

இன்றைய பொழுது ஆரவாரமான பாடலுடன் விடிகிறது. போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகமாக எழுகின்றனர். பின்னர் அனைவரும் சாப்பிட வருகிறார்கள். தொழிலாளிகளான ஆண்கள், எஜமானர்களான பெண்களுக்கு சமைத்து பரிமாறுகிறார்கள். அப்போது டேனியல் நித்யாவிற்கு சாதம் வைக்கிறார். பாலாஜி பொறியல் வைக்கும் போது, நித்யா அதனை மறுக்கிறார். ஆனால் டேனியல் கட்டாயப்படுத்தி பரிமாறி சாப்பிட வலியுறுத்துகிறார். 

அதில் பாதியை சாப்பிட்டு, மீதியை நித்யா கொட்டி விடுகிறார். இதனைக் காணும் மகத் ஏன் என்று கேள்வி கேட்கிறார். அதற்கு நீங்கள் எனக்கு அறிவுரை கூற வேண்டும். எத்தனையோ முறை நீங்கள் உணவை வீணாக்கி நான் பார்த்திருக்கிறேன் என்று நித்யா கூறுகிறார். பின்னர் சாப்பிட பரிமாறும் போது, பாலாஜி முறையற்ற வகையில் உணவு கொடுத்ததை குறிப்பிடுகிறார். இதையடுத்து ஆண்களில் சிலர் ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். 

அப்போது பாலாஜி செய்தது தவறு தான் என்றும், உணவை யாராவது தூக்கி போட்டால் எப்படி சாப்பிட முடியும் என்றும் டேனியல் பேசுகிறார். இதைத் தொடர்ந்து மதிய உணவு சமைக்கும் போது, மும்தாஜ் உதவி செய்யட்டுமா என்று கேட்க பாலாஜி மறுக்கிறார். அப்போது குக்கர் விசில் அடிக்க, நித்யா போலவே நீயும் அடங்க மாட்டேன் என்கிறாயா என்று பாலாஜி விமர்சிக்கிறார். பின்னர் பெண்கள் அறையில் வைஷ்ணவி மும்தாஜிடம் கேட்கிறார். 

படத்தில் அரைகுறையாக நடிக்கிறீர்கள். ஆனால் இங்கு உடை மாற்ற அறை வேண்டும், மாற்ற முடியாது என்றெல்லாம் கூறுகிறீர் என்கிறார். அதற்கு என் வீட்டிலும் சகோதரிகளின் குழந்தைகள் டிவி பார்க்கும் போது, எனது கவர்ச்சி காட்சிகள் வந்தால் உடனே சேனலை மாற்றி விடுவேன் என்கிறார். இதைக் கேட்டுக் கொண்டு வெளியே சென்று, யாஷிகா ஆண்களிடம் கோலி மூட்டுகிறார்.இதனைத் தொடர்ந்து அனைவரையும் பிக் பாஸ் கூப்பிடுகிறார். அப்போது சிறந்த எஜமானர், மோசமான தொழிலாளி யார் என்று தேர்வு செய்ய உத்தரவிடுகிறார்.

அதன்படி, முறையே ரித்விகா, அனந்த் வைத்தியநாதன் தேர்வாகின்றனர். அனந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சரியாக வேலை செய்ய முடியவில்லை என்று விளக்கம் அளிக்கிண்றனர். இதில் அனந்த் அடுத்த வார வெளியேற்றும் பட்டியல் பரிந்துரைக்கு நேரடியாக தேர்வாகிறார். இத்துடன் டாஸ்க் நிறைவு பெறுகிறது. 

பின்னர் அடுத்த வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் அறிவிப்பு வருகிறது. அதில், ஆண்கள் சிறப்பாக வழிநடத்தினார்கள் என்று கூறி, அவர்களுக்கு 1600 புள்ளிகள் முழுவதுமாக வழங்கப்படுகிறது. பெண்கள் சிறப்பாக வழிநடத்தாத காரணத்தால், அவர்களுக்கு 200 புள்ளிகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தப் புள்ளிகள் மூலம் அடுத்த வார உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இதனை ஆண்கள் முடிவு செய்து, எழுதி விடுகின்றனர். 

பின்னர் செண்ட்ராயனை ஏமாற்றுவதற்காக, போட்டியாளர்கள் தங்களுக்குள் சண்டையிடுவது போன்று நடிக்கின்றனர். பின்னர் பலத்த கைதட்டல்களுடன், செண்ட்ராயனிடம் உண்மையை கூறுகின்றனர். பிக் பாஸ் அனைவரையும் அழைத்து, ஒரு குடும்பத்தில் யார் சுயநலவாதி என்று விவாதிக்க உத்தரவிடுகிறார். இதற்காக ஆண்களில் மூவர், பெண்களில் மூவர் வரவழைக்கப்படுகின்றனர். அதில் பெண்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுகின்றனர். 

Ninaivil

திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019