பிரபாகரன் இல்லாமல் போனமையால் தாயகத்தில் கொடுமைகள் அரங்கேறுகின்றனவா? முற்றுப்புள்ளி வைக்கப் போவது யார்?

தமிழர் தரப்புகளை கொதி நிலைப்படுத்திய சிறுமி றெஜினாவின் படுகொலை விவகாரம் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.

கலைக்கும், கலாச்சாரத்திற்கும் சிறந்த எடுத்து காட்டாக இருந்த யாழ்ப்பாணம் இன்று கொலைக்கும், கொள்ளைக்கும் எடுத்து காட்டாக இருப்பது கவலைக்குரிய விடயமாக காணப்படுகின்றது.கடந்த 25ஆம் திகதி மாலை கிணறு ஒன்றில் இருந்து சிறுமி றெஜினாவின் சடலம் மீட்கப்பட்டது. சுழிபுரம் காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் குறித்த மாணவி பாடசாலைக்குச் சென்று மதியம் வீடு திரும்பியுள்ளார்.

மாணவி வீட்டிற்கு வந்த நேரத்தில், தாயார் சமூர்த்தி வங்கிக்குச் சென்றுள்ளார்.தகப்பனார் கூலி வேலைக்குச் சென்றுள்ளார். மதியம் 3.00 மணியளவில் வீட்டிற்கு வந்த தாயார் மகளைக் காணவில்லை என தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்று தேடியுள்ளார்.

எனினும், அங்கும் இல்லை, இதனையடுத்து குறித்த சிறுமியை உறவினர்கள் ஒன்று சேர்ந்து தேடியுள்ளனர்.விடயத்தினை அறிந்த அந்த பகுதி இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து கிராமம் முழுவதும் தேடியுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் ஆள் நடமாட்டம் அற்ற இடத்தில் உள்ள கிணற்றில் சிறுமியின் சடலம் கிடந்துள்ளது.சிறுமியைச் சடலமாக கண்ட இளைஞர்கள் சிறுமியின் தாயாருக்கு தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் உறவினர்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்குச் சென்ற வட்டுக்கோட்டைப் பொலிஸார் சிறுமியின் சடலத்தினை மீட்டுள்ளனர். சிறுமி சீருடைகள் அற்ற நிலையில் அரை நிர்வாணமாக கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.சிறுமியின் கழுத்தில் கயிற்றால் நெருக்கிய தடயம் காணப்பட்டுள்ளது. அத்துடன், சிறுமி அணிந்திருந்த தோடும் காணாமல் போயுள்ளது.

கடந்த 26ஆம் திகதி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக தந்தை உட்பட நால்வரை பொலிஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.இதன் பின்னர் தொடர்ந்தும் இருவர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பொலிஸார், சுழிபுரம் சிறுமி படுகொலை சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் ஆறு பேரை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தோம்.

இதன்போது பிரதான சந்தேக நபர் ஒருவரை அடையாளங்கண்டு அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டோம். அந்த விசாரணைகளின் ஊடாக, சிறுமியின் சீருடை மறைத்து வைத்திருந்த இடத்தை கண்டு பிடித்தோம். எனினும், சிறுமியின் தோடை மீட்க முடியவில்லை.பிரதான சந்தேக நபர், தான் இந்த கொலையை தனியாகவே செய்ததாக, ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஏனைய ஐந்து பேரிடமும் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய, இருவர் நேரடி சாட்சியமாக உள்ளனர்.அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், பிரதான சந்தேகநபருடன் இணைந்து மற்றுமொரு நபரும் கொலைச் சம்பவம் நடந்த அன்று மாலை, குறித்த சிறுமியை அழைத்து சென்றதைக் கண்டுள்ளதாக அவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரதான சந்தேக நபருடன் சிறுமியை அழைத்து சென்ற நபரை அடையாளம் கண்டுள்ளதாக, பொலிஸார் கூறியுள்ளனர்.அவர் தற்போது தலைமறைவாக உள்ளார்.

அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இதேவேளை, சிறுமியின் கொலை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையில் அவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் பரவலாக முன்வைக்கப்பட்டது.

கடந்த 27ஆம் திகதி பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்ட சிறுமியின் மரண பரிசோதனை அறிக்கை வெளியானது இதில், குறித்த சிறுமியின் பிரேத பரிசோதனையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்த விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க இந்த சிறுமியின் படுகொலை சம்பவத்தை போலவே கடந்த 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி காணாமல் போயிருந்த 8 வயதுச் சிறுமி ஏழு நாட்களின் பின்னர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.சுழிபுரம் பாண்டாவெட்டை காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் கற்ற கிருஷ்ணமூர்த்தி சாலினி என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த சிறுமியின் சடலம் அவரின் வீட்டில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் ஆள் நடமாட்டம் இல்லாத வீட்டு வளவில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தது.அதேபோல் தான் சடலமாக மீட்கப்பட்ட றெஜினா என்ற சிறுமியும், அவருடைய வீட்டிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் காணப்பட்ட கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு இருந்தார்.

இதேவேளை, மர்ம முறையில் உயிரிழந்த இரு சிறுமிகளும் அரை நிர்வாணமாக இருந்ததுடன், அவர்களது உடல்களில் காயங்களும் காணப்பட்டது. இந்த சிறுமிகள் செய்த குற்றம் தான் என்ன? பாவைகளை வைத்து விளையாடும் வயதில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்சிறுமியின் படுகொலை சம்பவத்தை கண்டித்து தமிழ் பகுதி எங்கும் போராட்டங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த போராட்டத்தை பாடசாலை மாணவர்களும் பொது மக்களும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். ஆரம்பத்தில் போராட்டங்களுக்கு அரசியல் வாதிகளோ கல்வித்துறை சார் அதிகாரிகளோ, சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளோ குரல் கொடுக்கவும் வில்லை என குற்றம் சாட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பதை போல தமிழ் அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர். தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பிர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளோர் தழிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருவார் என்று கோசம் எழுப்பியுள்ளனர்.

உண்மையில் விடுதலை புலிகளிகளின் காலத்தில் இவ்வாறு சிறுமிகளுக்கோ பெண்களுக்கோ மோசமான வன் கொடுமைகள் இடம்பெறவில்லை, பெண்களையும், சமூகத்தையும் சீரழிக்கும் நபர்களுக்கு அவர் கொடுக்கும் தண்டனையும் இதற்கு காரணம்.தழிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்கவே வைத்தவர்.

ஒரு நாட்டின் வரலாற்றை மாத்திரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் என்று கூறினாலும் மிகையாகாது.ஒரு கட்டுக் கோப்பான சமூக அமைப்பு பிரபாகரன் காலத்தில் இருந்தது என்பது உண்மை.

அன்று யாழ். மண்ணில் குண்டு மழை பெய்திருந்தாலும் ஈழ மண்ணில் பெண்களுக்கு இருந்த பாதுகாப்பு இன்று இல்லை.அன்று ஹிரிஷ்ணவி, வித்தியா என்று கொடூரர்களுக்கு இரையானது போதாது என்று இன்று றெஜினா வரைநீண்டு கொண்டு போகின்றது, இதற்கு முடிவு கட்ட வேண்டிய நிலையில் ஒவ்வொரு குடிமகனும் உள்ளனர்.

குற்றவாளிக்கு பொலிஸாரும், அரசும் தண்டனை பெற்று கொடுக்கும் என்று எண்ணுவது ஒருபுறம் இருந்தாலும், இதற்கு என்ன அடிப்படை காரணி என்பதை மக்கள் உணர வேண்டும்.தொடர் கதையாக தொடரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த இலங்கையில் வலுவான சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

பொலிஸார் தமது கடமைகளை சரிவர நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் மட்டுமன்றி அயலவர்களும் கவனம் செலுத்த வேண்டும். இன்று அயல் வீட்டு பிள்ளைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை நாளை எமது வீட்டிலும் ஏற்படலாம்.

இவ்வாறான கொடுமைகள் தொடர போதைப்பொருள் பாவனையும் பிரதான காரணமாக மாறியுள்ளது. இதனை முற்றாக ஒழிக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

- பொது எழுத்தாளர் Nivetha 

Ninaivil

திருமதி இராசமலர் நாகலிங்கம்
திருமதி இராசமலர் நாகலிங்கம்
யாழ். உரும்பிராய்
கனடா
22 FEB 2019
Pub.Date: February 23, 2019
திரு பத்மநாதன் கோவிந்தபிள்ளை
திரு பத்மநாதன் கோவிந்தபிள்ளை
யாழ். நாகர்கோவில்
கனடா
21 FEB 2019
Pub.Date: February 22, 2019
திரு சரவணப்பெருமாள் பாலசேகர்
திரு சரவணப்பெருமாள் பாலசேகர்
யாழ். வல்வெட்டித்துறை
கனடா
10 FEB 2019
Pub.Date: February 21, 2019
திருமதி சரஸ்வதி கணபதிப்பிள்ளை
திருமதி சரஸ்வதி கணபதிப்பிள்ளை
யாழ். வடமராட்சி
பிரான்ஸ்
18 FEB 2019
Pub.Date: February 20, 2019
திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
யாழ்ப்பாணம் வைமன் வீதி
கனடா
17 FEB 2019
Pub.Date: February 19, 2019
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
யாழ். உடுவில்
டென்மார்க்
21 FEB 2016
Pub.Date: February 18, 2019

Event Calendar